24 special

யோகியிடம் நூதன கோரிக்கை வைத்த தமிழகத்தை சேர்ந்த இளைஞர்.. இது தான் "சங்கி" குசும்பா !


நுபுர் சர்மாவை எதிர்த்து போராட்டம் செய்ய போவதாக கிளம்பிய பலர் இப்போது வீடுகள் இடிக்கப்பட்டு பொதுவெளியில் இருக்கும் சூழல் உண்டாகி இருக்கிறது, இந்த சூழலில் கலவரத்தில் ஈடுபடும் நபர்கள் வீடுகள் இடிக்கப்படும் என மேலும் உறுதியாக உத்திர பிரதேச அரசு தெரிவித்து இருப்பது பலரை தூக்கமின்றி ஆழ்த்தியுள்ளது.


இது ஒருபுறம் என்றால் தமிழகத்தை சேர்ந்தவரும் , தீவிர பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்டவருமான இளைஞர் அஜய் கிருஷ்ணா என்பவர் சமூக வலைத்தளம் மூலம், உத்திர பிரதேச முதல்வர் " யோகி ஆதித்யநாத்திற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார், அதில், "வீடுகளை புல்டோசர் வைத்து இடிப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. எனவே வீட்டை இடித்த பின், யாருடைய வீடு இடிக்கப்பட்டதோ, அவர்களிடமிருந்தே இடிப்பதற்காக ஏற்பட்ட தொகையை வசூலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கலவரத்தில் இறங்கி வீடுகள் போய் விட்டதே ஏன் இந்த தவறை செய்தோம் என பலர் அதிர்ச்சியில் இருக்க இப்போது அவர்கள் வீட்டை இடிக்க ஆன செலவை அவர்களிடம் இருந்தே வசூல் செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்து இருப்பது, போராட்டம் ஆர்ப்பாட்டம் என கிளம்பும் தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்ற பழமொழி போல புல்டோசரை வைத்து இடித்துவிட்டு அதற்கான செலவையும் அவர்களிடம் இருந்தே வசூலிக்க வேண்டும் என்ற இளைஞரின் கோரிக்கையை பார்த்த பலர் கோயம்புத்தூர் குசும்பு கேள்வி பட்டு இருக்கிறோம் இது என்ன சங்கிகள் குசும்பா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எனினும் இளைஞர் அஜய்யின் கோரிக்கை ஏற்கனவே பல இடங்களில் நிறைவேற்ற பட்டு இருக்கிறது எனவும், சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அதற்கான செலவை மாநில அரசு, சம்பந்தப்பட்ட நபர்களிடம் வசூல் செய்துள்ளது என்றும் உபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.