மதுரையில் பாஜக அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது, இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இதர பாஜக மூத்த நிர்வாகிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர், கடும் மழை மற்றும் காற்று ஆகிய இயற்கை இடையூறுகள் இடையே பொது கூட்டம் தொடங்கியது.
இந்த சூழலில் மதுரையை சேர்ந்தவரும் பாஜகவின் மிக மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மேடையில் அமராமல் இருந்தது, மதுரையை சேர்ந்த பலருக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது, பிரதமர் நிகழ்ச்சி தொடங்கி பாஜக தேசிய தலைவர்கள் நிகழ்ச்சி என எந்த கட்சி நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றாலும் முன்னின்று நடத்துபவர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன்.
அப்படி இருக்கையில் நேற்றைய மதுரை நிகழ்ச்சியில் எங்கு இருந்தார் என்ற கேள்வி எழுந்த சூழலில் அவர் தொண்டர்களோடு தொண்டராக மழையில் நனைந்தப்படி பாஜக வாழ்க.. மோடி அரசின் சாதனைகளை கூறி குரல் கொடுத்து கொண்டு இருந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது.
கட்சி மற்றும் அதன் கொள்கையில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே இது போன்று தொண்டர்களோடு தொண்டராக களத்தில் இறங்கி நிற்க முடியும் என பல தரப்பிலும் கருத்துக்கள் கூறப்படுகின்றன, பாஜக போன்ற இயக்கம் நாடு முழுவதும் வலுப்பெற்று நிற்கிறது என்றால் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் போன்ற கொள்கை பிடிப்பு கொண்ட பதவியை உயர்வாக கருதாமல் தொண்டர்களோடு தொண்டராக இறங்கி பணியாற்றும் நபர்களால் மட்டுமே சாத்தியம் என்று கூறப்படுகிறது.
பாஜகவின் மாநில பொது செயலாளர் என்ற பெரும் பதவி இருந்தும் மழையில் நனைந்தப்படி ஸ்ரீனிவாசன் தொண்டர்களோடு தொண்டராக களத்தில் நின்றது மதுரை பொது கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக மாறி இருக்கிறது.
உதயகுமார் செந்திவேல்