ரயில் முன்பு பாய்ந்த 18 வயது இளைஞன் ஒருவரை தனது உயிரை பணயம் வைத்து ஒரு நொடியில் காப்பாற்ற காவலருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
18 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் மகாராஷ்டிரா வித்தல்வாடி ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்ள விரைவு ரயில் வரும்போது ரயிலின் முன் குதிக்கிறார். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் கல்யாண் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஹிருஷிகேஷ் மானே.,
தன் உயிரைப் பணயம் வைத்து தண்டவாளத்தில் குதித்து அந்த இளைஞரின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றுகிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகின்றன, தனது உயிரை பற்றி கவலை கொள்ளாமல் இளைஞர் உயிரை காப்பாற்றிய காவலர் ஹிருஷிகேஷ் மானே-வின் பாதம் தொட்டு வணங்குவோம் என பலரும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மன அழுத்தத்தின் காரணமாக இளைஞர்கள் இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வரும் சூழலில் காவலர் காப்பாற்றிய உயிர் பிழைத்த இளைஞர் தற்போது தன்னை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்துள்ளார், வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.