பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், விசிகவினரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த இளைஞர் தனது கை உடைப்பட்ட போதும் பாஜக நடத்திய பேரணியில் கலந்து கொண்டதாகவும் அவரை அண்ணாமலை நேரில் விசாரித்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.
பாஜக சார்பில் இன்று பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மாநில அரசை கண்டித்த மிக பெரிய பேரணி நடந்தது இதில் பாஜக முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர், இந்த நிலையில் பல மாவட்டங்களில் இருந்தும் பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர், இந்த சூழலில் கை உடைந்த நிலையிலும் கடலூரில் இருந்து இளைஞர் ஒருவர் பாஜகவின் பேரணியில் கலந்து கொண்டது கவனத்தை பெற்றது.
இது குறித்து அஸ்வத்தாமன் தெரிவித்தது பின்வருமாறு : கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி விசிகவினரால் தாக்கப்பட்ட கடலூர் கிழக்கு மாவட்ட ஓபிசி அணி துணை தலைவர் பாபு அவர்கள், இன்று தன்னுடைய உடைந்த கைகளோடு பேரணியில் வந்து கலந்துகொண்டார்.
அவருடைய ஈடுபாட்டை பாராட்டி, அவரை அண்ணாமலை அண்ணாவிடம் அழைத்து சென்றேன்.அவரை மிக்க வாஞ்சையுடன் விசாரித்தார் அண்ணாமலை அவர்கள். கடலூர் வரும்போது அவருடைய வீட்டிற்கு வருவதாக கூறினார். அவருக்கு என்னன்ன உதவிகள் வேண்டுமென்று நேரமெடுத்து அக்கறையுடன் விசாரித்தார்.
பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறான் என அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.