24 special

மிருக பலிக்கு தடை இல்லை..! ஆனால்..? அரசு கொடுத்த விளக்கம்..!

Tripura animals
Tripura animals

திரிபுரா : இன்று இந்தியாவெங்கும் இஸ்லாமிய பெருமக்களால் பக்ரீத் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே பிஜேபி ஆளும் திரிபுரா மாநிலத்தில் அரசு மிருகபலிக்கு தடைவிதித்து குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை புண்படுத்தியதாக கூறி மாநில எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தன.


இந்நிலையில் திரிபுரா விலங்கு வள மேம்பாட்டுத்துறையான ARDD நேற்று தனது அறிக்கையில் மிருகபலி குறித்து தெளிவுபடுத்தியுள்ளது. நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ARDD செயலாளர் டிகே.தேப்நாத் " நகர்ப்புறங்களில் நடக்கும் மத சம்பிரதாயங்கள் அனுமதிக்கப்பட்ட இறைச்சிக்கூடங்களில் தான் செய்யவேண்டும், 

அகர்தலா முனிசிபல் கார்ப்பரேஷன் உட்பட எந்த முனிசிபல் அமைப்புகளிலும் இறைச்சிக்கூடங்கள் இல்லாததால் நகர்ப்புறங்களில் எந்த விலங்குகள் கொல்லப்பட்டாலும் அது சட்டவிரோதமாக கருதப்பட்டு தகுந்த சட்டநடவடிக்கை எடுக்கப்படும். பக்ரீத் தினத்தன்று சட்டவிரோதமாக விலங்குகளை கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது" என தேப்நாத் குறிப்பிட்டார்.

இதனிடையே மாநில எதிர்க்கட்சியான சிபிஐஎம் கூறுகையில் " இந்த அறிவிப்பு ஒரு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திப்படுத்தும் வகையில் தெளிவான நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது" என விமர்சித்துள்ளது. ஏற்கனவே ஜூன் 9  அண்டைமாநிலங்களுடன் கலந்தாலோசித்து அதன் அடிப்படையில் மாநில அரசு அறிக்கை வெளியிட்டதாக அரசுத்தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.