24 special

அவர்கள்தான் காரணம்..! அஜித் தோவல் பரபரப்பு குற்றசாட்டு..!

Ajith doval
Ajith doval

ஜம்முகாஷ்மீர் : ஜம்முகாஷ்மீரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதையொட்டி மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் காஷ்மீர் பகுதிகளில் மீண்டும் குடிபெயர்ந்த பண்டிட்கள் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் மீது கடந்த சிலநாட்களாக துப்பாக்கிசூடு நடத்தப்படுவது கவலையளிப்பதாக ஜம்மு அரசு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுகுறித்து விவாதிக்க உயர்மட்டக்குழு கூட்டத்தை நடத்தியுள்ளார். மேலும் நார்த் ப்ளாக்கில் கடந்த வெள்ளிக்கிழமை அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பல புலனாய்வுத்துறை அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் " காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் தலிபான்கள் நடமாட்டம் இருப்பதற்க்கான எவ்வித ஆதாரமும் இல்லை. இந்த சதிச்செயலின் பின்புலத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன" என அஜித்தோவல் அமித்ஷாவிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜம்முவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில் " சிறுபான்மையின மக்கள் வெளியேற்றப்பட வாய்ப்பே இல்லை. ஆனால் அவர்கள் பத்திரமான வேறொரு இடத்திற்கு மாற்றப்படுவார்கள். நரேந்திர மோடியின் அரசு இனப்படுகொலைகளை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது" என கூறினார். மேலும் இன்னொரு அதிகாரி குறிப்பிடுகையில் காஷ்மீர் பகுதிகளில் வன்முறைகள் அதிகரித்துள்ளது. ஆனால் இது ஜிஹாத் அல்ல. சில அவநம்பிக்கையான கருத்துக்களால் ஏற்பட்ட தாக்குதல் என தனியார் செய்திநிறுவனத்திடம் கூறியுள்ளார். 

சமீபத்தில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த கமாண்டர் ஒருவன் கொல்லப்பட்டான். அதையடுத்தே இந்த செயல்களை பாகிஸ்தான் ஊக்குவித்துவருவதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரே வாரத்தில் பத்திற்க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.