24 special

போராட்டத்தில் இறங்கிய பிஜேபி..! குவிக்கப்பட்ட பாதுகாப்புப்படை..!

Bjp
Bjp

ஹைதரபாத் : கடந்த மே 28 அன்று ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பப் ஒன்றில் நடந்த மதுவிருந்தில் கலந்துகொண்டு திரும்பிய 17 வயது சிறுமியை சில இளைஞர்கள் காரில் வைத்தே கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சிறுவர்கள் என கூறப்படுகிறது. மேலும் சில உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் தான் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று சிறுவர்களுடன் சேர்த்து ஐந்துபேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில உள்துறை அமைச்சரின் மகன் பெயரும் இதில் அடிபடுவது குறிப்பிடத்தக்கது. மே 28 அன்று நடந்த இந்த கொடூரம் குறித்து சிறுமியின் தந்தை மே 31 அன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

குற்றவாளிகள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354 மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ்  பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது.  ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் தங்களது காரை நிறுத்தியுள்ளனர். பிறகு அந்த சிறுமியை கூட்டாக சேர்ந்து காரிலேயே வைத்து சீரழித்தபின்னர் திரும்பியுள்ளனர்.

போலீசாரின் அறிக்கைப்படி சிறுமியை சீரழித்த கயவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் அந்த காரின் ஓனரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பிஜேபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றவாளிகளை மாநில அரசு தப்பிக்கவைக்கப்பார்கிறது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஜூப்ளி ஹில்ஸில் அமைந்துள்ள காவல்நிலையத்திற்கு எதிரே பிஜேபி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க பாதுகாப்புப்படை போலீசார் நூற்றுக்கணக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.