24 special

திருப்பரங்குன்றம் விவகாரம்... திமுக அரசு டிஸ்மிஸா... வெளியான முக்கிய தகவல்... தலையில் கைவைத்த கோபாலபுரம்

MKSTALIN,SEKARBABU
MKSTALIN,SEKARBABU

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோவிலுக்கு சற்று தொலைவில் தர்காவும் அமைந்துள்ளது. இதனால் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தவிர்க்கப்பட்டு வந்தது.பாரம்பரியத்தை மீட்டெடுக்க பல ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் தான்  ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் மலையில், அங்குள்ள தர்காவில் ஆடு வெட்ட முயன்றதை, தடுத்தனர். 'வழிபடத் தடையில்லை; உயிர்பலி கொடுக்கத்தான் தடை' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


ஆனால் இதை பொருட்படுத்தாமல், கடந்த , ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்கப் போவதாக கூறி சில முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மலையேற முயன்றனர்.அதனை தொடர்ந்து  மலை மீதுள்ள சமணர் குகையை ஆக்கிரமிக்கும் நோக்கில், பச்சை பெயின்ட் அடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.இச்சூழலில் நவாஸ் கனி எம்.பி., திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவை ஆய்வு செய்ய வந்தார். அங்குள்ள போலீசாரிடம், 'மலை மேல் உணவு கொண்டு போக எழுத்துப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளதா?' எனக் கேட்டார்  போலீசார் 'இல்லை' என்றனர்.அவருடன் வந்தவர்கள், 'பார்சல் கொண்டு வந்து சாப்பிடவும் தடை உள்ளதா?' எனக் கேட்க, 'இல்லை' என போலீசார் கூறினர்.இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட அவர்கள், தயாராக பார்சலாக வாங்கி வந்த பிரியாணியை, மலை படிக்கட்டுகளில் வைத்து அமர்ந்து சாப்பிட்டனர்.விஷயம் பெரிதானது.  திருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் மலை என கூறி எம்.பி.நவாஸ்கனி சென்று ஆய்வு நடத்தியதால் சர்ச்சையும் எழுந்தது.

இந்தநிலையில் தான் தற்போது திருப்பரங்குன்றம் தீப விவகாரம் வேறு பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.நிச்சயம் இந்த பாதையை உருவாக்குவது  தமிழக அரசு தான் தவிர வேறு யாருமில்லை. மீண்டும் மீண்டும் நீதிமன்றம் கண்டித்தாலும் அரசு தன் பிடிவாதத்தை தொடர்கின்றது, தமிழக அரசு இப்படி மீண்டும் பிடிவாதம் பிடிப்பதில் ஒன்று தெரிகின்றது, ஒரு அரசியல் கட்சியாக திமுக இப்படி அதிருப்தியினை சம்பாதிக்க விரும்பாது ஏன் இந்த ஸ்டாலின் இப்படி செய்கிறார் என கேள்விகள் எழுந்துள்ளது. மேலும்  முக ஸ்டாலின் பின்னால் யார்  இருக்கிறார்கள் என்ற கேள்வி அந்த கட்சிக்குள் உருவாகி உள்ளது. 

இதற்கிடையில் "அரசியல்சாசன நீதிமன்றத்தின் உத்தரவை சட்ட ரீதியாக மட்டுமே ரத்து செய்யமுடியுமேயன்றி வேறு வழியில் அல்ல. அந்த உத்தரவுக்கு இடைக்கால தடையின்றி அல்லது ரத்து செய்யப்படாமல் இருக்கும் வரை அதிகாரிகள் அதற்குக் கட்டுப்பட வேண்டியவர்களே ஆவர். காவல் ஆணையர் தம்மை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மேலானவராகக் கருதிக்கொண்டு உத்தரவை நிறைவேற்ற முன்வரவில்லை.  நீதி மன்ற தீர்ப்பை விட அரசியல் வாதிகள், ஆளும் கட்சி சொல்படி தான் காவல் துறை ஆணையர் நடப்பது ஜனநாயக விரோத செயல் மட்டுமல்ல, சட்ட விரோத செயலும் கூட. இன்றும் தீபத்தூணில் தீபத்தை ஏற்ற காவல்துறை தடையாக இருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல் என குற்றம் சட்டியுளார்கள். 

மேலும்  இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில், இந்து கோவில்கள் திமுக குண்டர்களாலும், பிற இந்து வெறுப்பாளர்களாலும் தாக்கப்படுகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும், இல்லையெனில் மத்திய அரசு அரசியலமைப்பை வலியுறுத்தி திமுக அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.