24 special

மதம் மாறிய பிறகும் சலுகையா? நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு. ...வெட வெடத்து போன திருமா. அடிச்சாரு பாருங்க ஆப்பு

THIRUMAVALAVAN
THIRUMAVALAVAN

நேற்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிகவும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. ஹிந்து, சீக்கியம், பௌத்த மதங்களில் இருந்து வேறு மதத்திற்கு மாறியவர்கள் பட்டியலினச் சலுகைகளை தொடர்வது அரசியல் சாசனத்தையே ஏமாற்றுவது என்பதை மிகத் துல்லியமாக கூறிய அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு, உத்தரப் பிரதேசத்தைத் தாண்டி முழு இந்தியாவிலும் பெரிய பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.


உதிர்ப்பிரேதேசம்மாநிலத்தை சேர்ந்த   ஜிதேந்திர சஹானி தன் கிராமத்தில் இருந்த சிலரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாகவும், ஹிந்து மத நம்பிக்கைகளை தரக்குறைவாக விமர்சித்ததாகவும் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து இவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்து கைது நடவடிக்கை பாய்ந்தது. . இந்த வழக்கை ரத்து செய்ய சஹானி உயர்நீதிமன்றத்தை அணுகியபோது,வசமாக சிக்கினார்  அவர் ஹிந்துவாகப் பிறந்தவர் என்றாலும், பின்னர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி தற்போது மதபோதகராக செயல்படுகிறார் என்பது வெட்டவெளிச்சமானது . ஆனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் தன்னை “ஹிந்து” எனக் குறிப்பிட்டது பெரிய சந்தேகத்தை எழுப்பியது. மேலும் அவர் பட்டியலின சலுகைகளை தற்போதும் பெற்று வந்துள்ளார்.  

இதனை தொடர்ந்து இது ஒரு தனிப்பட்ட வழக்கு அல்ல பொது நலன் சார்ந்த வழக்கு என  நீதிமன்றமே உணர்ந்த பின் வழக்கு வேகமெடுத்தது. . ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில், ஒருவர் பிற மதத்திற்கு மாறிய பின் அவரின் முன்னைய பட்டியலின அந்தஸ்து செல்லாது, அவருக்கான சலுகைகள் தானாக முடிவடையும் என்று கடுமையாக எச்சரித்துள்ளது. “மதம் மாறி — சலுகை தொடர்வது என்பது அரசியல் சாசனத்தின் மீது நடத்தப்படும் நேரடியான மோசடி” என உச்ச நீதிமன்றம் முன்பே விளக்கியது. குறிப்பாக 1992, 2004, 2011 ஆகிய ஆண்டுகளில் வந்த முக்கிய தீர்ப்புகளில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்றம்  சஹானி மதம் மாறிய பிறகும் பட்டியலினச் சலுகைகள் பெற்றாரா என்பது குறித்து மூன்று மாதங்களுக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறுகள் இருந்தால் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி மாநிலத்தின் தலைமைச் செயலர் முதல் சமூகநலத்துறை வரையிலான அதிகாரிகள் முழு உத்தரப் பிரதேசத்திலும் விரிவான ஆய்வு நடத்த வேண்டும் . மதம் மாறியும், பட்டியலினப் பிரிவில் இருந்து நீக்கப்படாமல், தவறாக சலுகைகள் பெற்றிருப்போர் எத்தனை பேர் என்பதற்கான மாநில அளவிலான தரவுகளை நான்கு மாதங்களில் தாக்கல் செய்ய மாவட்டக் கலெக்டர்களுக்கு நேரடி உத்தரவு விடுக்கப்பட்டது.

இந்த உத்தரவின் டோன், இது உ.பி.க்கான தீர்ப்பு மட்டும் அல்ல… இந்தியா முழுவதுக்கும் மதம் மாறியவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்று சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.  இதன் மூலம் மதமாற்றத்திற்குப் பிறகும் பட்டியலினச் சலுகைகளை தவறாக பயன்படுத்தும் வழக்குகள் நாடு முழுவதும் பெரிதும் கவனத்திற்கு வரும் நிலையில், உள்ளது பல மாநிலங்களிலும் இதே போல் ஆய்வுகள் தொடங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.மேலும் தமிழகத்தில் மதம் மாறியவர்கள் பல பேர் பட்டியலின சலுகைகளை பெற்று வருகிறார்கள். அதுமட்டுமிலலால்வன்கொடுமை சட்டத்தையும் பயன்படுத்திகிறார்கள் என்ற புகார்கள் அதிகம் உள்ளது. உத்திர பிரேதேசத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டால் சமுதாய ரீதியாக செயல்படும் பல அரசியல் கட்சித்தலைவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அதுமட்டுமில்லாமல் திருமா மதம் மாறினாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.