24 special

இது இஸ்லாத்திற்கு எதிரானது..! ஜமியத் உலமா-இ-ஹிந்த்..!


ராஜஸ்தான் : நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்துக்களை கூறியதாக நுபுர் ஷர்மா என்பவருக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டம் பல இடங்களில் வன்முறையாக தூண்டப்பட்டது. வன்முறையை தூண்டிய பலர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டனர். மேலும் நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவாக கருத்துக்களை கூறிய பலர் நேரடியாக கொலைமிரட்டல் விடுக்கப்பட்டனர். 


இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் தினக்கூலியாக தையல் தொழில் செய்துவருபவர் ஒருவர் நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவாக கருத்து கூறியதற்காக சில வகுப்புவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து உதய்ப்பூர் பகுதி முழுவதும் சிஆர்பிஎப்பின் பிரிவு 144 தடை உத்தரவை மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்ஹையா எனும் தையல் தொழிலாளி உதய்ப்பூரில் நெரிசலான சந்தைப்பகுதியில் இருந்த அவரது கடையில் புகுந்த இருவர் அவரது கழுத்தை அறுத்ததுடன் அவரின் தலையை துண்டிக்க முயன்றுள்ளனர். மேலும் பாரத பிரதமர் மோடியையும் மிரட்டியுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோஸ் முகம்மது மற்றும் ரியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடுமுழுவதும் இதற்க்கு கண்டனக்குரல்கள் எழும் என எதிர்ர்பார்த்த நிலையில் வெகு சில ஊடகங்களே இந்த சம்பவத்தை வெளியுலகிற்கு எடுத்துக்கூறின. இந்நிலையில் பிரபல இஸ்லாமிய அமைப்பான ஜமியத் உலமா பொதுச்செயலாளரான கால்ஸிமுதீன் காஸ்மி " இந்த சம்பவத்தை யார் செய்திருந்தாலும் சரி எந்தவகையிலும் அதை நியாயப்படுத்த முடியாது.

இது நாட்டின் சட்டத்திற்கும் நமது மதத்திற்கும் எதிரானது. நமது தேசத்தில் சட்ட அமைப்பு உள்ளது. சட்டத்தை யாரும் கையிலெடுக்க உரிமை இல்லை. நாட்டின் அனைத்து குடிமக்களும் தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நாட்டின் அமைதியை பேண முன்வரவேண்டும்" என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.