24 special

ஊடுருவும் வெளிநாட்டனர்..! கிடுக்கிப்பிடி பிஜேபி..!

Visa
Visa

கர்நாடகா : நேபாளம் மேற்குவங்கம் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவி சட்டவிரோதமாக குடியேறும் வந்தேறிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவருவதாக நிபுணர்கள் வருத்தம்தெரிவிக்கின்றனர். மேலும் அவர்களால் தேசபாதுகாப்புக்கும் சமூகநல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுவருவதாக மத்திய அரசு கவலைகொள்வதாக அதிகாரிகள் வட்டாரங்கள் கருதுகின்றன.


இந்நிலையில் ஊடுருவல்காரர்கள் தவிர அண்டை நாடுகள் மற்றும் மேலை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்து தங்களது விசா காலம் முடிந்தபின்னரும் திரும்பி செல்லாமல் இந்தியாவிலேயே தங்கியிருப்பவர்களால் பெரிதும் பாதிப்பு ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இதனிடையே கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் " எந்த ஒரு சட்டப்பூர்வமான ஆவணங்களும் இல்லாமல் தட்சிண கன்னட மாவட்டத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை மாவட்டத்தில் உள்ள காவல்நிலையம் வாரியாக கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்" என கோரியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் " காவல்துறையினர் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க சிறிது அவகாசம் தேவைப்படும்.

சமீபத்தில் சட்டவிரோதமாக விசாகாலம் முடிந்தபின்னரும் தங்கியிருந்த வெளிநாட்டினர் பலர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் தடுப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருசிலர் இந்திய அரசின் குடும்ப அட்டை ஆதார்கார்டு மற்றும் வாக்காளர் அட்டையை பெற்றுள்ளனர். பெங்களூரில் வெளிநாட்டினர்களை சட்டவிரோதமாக தங்கவைத்த வழக்குகள் நடைபெற்று வருகின்றன. 

தட்சிணகன்னடா மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அந்த மாவட்ட போலீஸ் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தண்டனை சதவிகிதம் குறைவாகவே உள்ளது. அங்கு தண்டனை சதவிகிதம் குறைந்திருப்பதின் காரணங்களை ஆராய அரசு வழக்கறிஞர்கள் மற்றும் உதவி அரசு வழக்கறிஞர்களுடன் கூட்டங்களை நடத்தியுள்ளேன். 

மாநிலத்தில் காவல்நிலையங்கள் பல வாடகை கட்டிடங்களில் இயங்கிவருகிறது. தற்போது 100 காவல்நிலையங்களை சொந்தமாக அமைக்க 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தட்சிணகன்னட மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல்நிலைய சரகத்திற்குட்டபட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்து கணக்கெடுப்பை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என உள்துறை அமைச்சர் ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.