24 special

மாய்ந்து "மாய்ந்து" பட்ஜெட் வாசித்த தியாகராஜன் சிம்பிளாக முடித்த அண்ணாமலை..!

Thiyagarajan and annamalai
Thiyagarajan and annamalai

தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று ஆட்சியமைத்த பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, முழுபட்ஜெட்டை இன்று முதல் முறையாக தாக்கல் செய்தது.


 நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் தம் கட்டி வாசித்தார் இடை இடையே தமிழில் வாசிக்க சிரமம் கொண்டார் பழனிவேல் தியாகராஜன் .

இதற்கிடையில் ஆங்கிலத்தில் சிறிது நேரம் பட்ஜெட் வாசித்தார் தியாகராஜன் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்வதற்காக பட்ஜெட்டை ஆங்கிலத்தில் வாசித்ததாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விளக்கமும் கொடுத்தார். அவரின் இந்த முயற்சிக்கு திமுகவினர் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

அதே நேரத்தில் தமிழில் வாசிக்க சிரமம் கொண்டு நிதி அமைச்சர், ஆங்கிலத்தில் வாசித்தார் என்று விமர்சனமும் எழுந்துள்ளன, இது ஒருபுறம் என்றால் மிகவும் சிறப்பான பட்ஜெட் என திமுக ஆதரவாளர்கள் புகழ்ந்துவரும் வேலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிம்பிளாக கடந்த திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி படி ஏமாற்று வேலையாக இருக்க கூடாது என விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தெரிவித்ததாவது இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில்.  1. மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது

2. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை, 3. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது. 

4. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு  உயர்கல்வியினை பயிலும் போது ₹1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்!ஆனால் இது 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும்எனவும் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை, மொத்தத்தில்தமிழக பட்ஜெட் பகல் கனவு பட்ஜெட் சாத்தியம் இல்லாதது என சிம்பிளாக முடித்துள்ளார் அண்ணாமலை.