24 special

திடீரென்று திருவண்ணாமலை நோக்கி வரும் பக்தர்களின் கூட்டம்!! பின்னணியில் இதுதான் நடக்கிறதா?? அதிரவைக்கும் காரணங்கள்!!!

SHIVAN TEMPLE
SHIVAN TEMPLE

 தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் வரிசையில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலில் ஒன்றாக உள்ளது தான் இந்த திருவண்ணாமலை திரு அருணாச்சலேஸ்வரர் கோவில்,  சிவபெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்ஷினி  தளமாக இந்த கோவில்  இடம் பெற்றுள்ளது. இந்த தளத்தினுடைய மூலவர் அருணாச்சலேஸ்வர், அம்பிகை உண்ணாமலையால்  என்று  இரு தெய்வங்கள் இங்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். சிவபெருமானுக்கும், பெருமாளுக்கும் தங்களின் யார் பெரியவர் என்று போட்டி ஏற்படும் பொழுது சிவன் நெருப்பு பிளம்பாக தோன்றி தன்னுடைய அடியையோ அல்லது முடியயோ காணுபவரே பெரியவர் என்று சொல்ல, உருவான வடிவமே லிங்கோட்பவர். அதாவது எல்லா சிவாலயங்களிலும் சிவனுடைய பின்புறம் அமைந்திருக்கும் சிற்பம் என்று கூறுகின்றன. இந்தக் கோவிலில் தான் சிவன் அர்த்தநாரீஸ்வரராக உருவெடுத்து உள்ளார்.


இந்த தளத்தில் பல சிறப்பு பெற்ற பாடல்களை பாடப்பட்டுள்ளது. பல நகரங்களில் இருந்து  பல சித்தர்களும் முனிவர்களும் இந்த கோவிலுக்கு வந்து தியானம் செய்து முக்தியும் அடைந்திருக்கின்றனர் என்று பலர் கூறுகின்றனர். மேலும் இங்கு முக்தி அடைந்த சித்தர்களின் சமாதிகள் இந்த கோவிலில் சுற்றி கிரிவலம் வரும் பாதைகளில் அமைந்திருக்கும். முக்தி தரும் தலங்களில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். திருவண்ணாமலை  கோவிலில் நினைத்தாலே முக்தி தான் என்று சைவர்கள் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளனர். இங்கு அமைந்திருக்கும் மலையே சிவன் போல அமைந்திருப்பதால், மக்கள் அனைவரும் சிவனையே சுற்றி வருவதாக நினைத்து கிரிவலம் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அண்ணாமலையை நினைத்து இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்குள் அடியெடுத்து வைத்த உடனேயே அவர்களுக்கு உள்ள வினைகள் அனைத்தும் நீங்கி  செல்வது கண்கூடாக பார்க்கலாம் என்று இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் கூறுகின்றனர். 

இப்படி புகழ் பெற்ற திருவண்ணாமலைக்கு திருக்கார்த்திகை,  சிவன் ராத்திரி மற்றும் அமாவாசை போன்ற நாட்களில் மட்டுமே அதிக அளவில் பக்தர்கள் கூடுவர். ஆனால் தற்போது திடீரென்று சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அதிகமாக பக்தர்கள் கூட்டம் பெருக்கெடுத்து வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் யார் என்று பார்த்தால் அதிக அளவு ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் இருந்து வருபவர்களாகவே உள்ளனர். இவ்வாறு திடீரென்று பக்தர்கள் கூட்டம் அடுத்த மாநிலத்தில் இருந்து பெருக்கெடுத்து வருவதற்கு என்ன காரணம் என்று விசாரிக்கும் பொழுது தான் திடுக்கிடும் உண்மைகள் வெளியே வருகிறது!!!ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்கள் கடவுளின் மீது அதிக நம்பிக்கை மற்றும் பக்தியும் கொண்டவர்களாக இருப்பதினால் அதனை பயன்படுத்தி சில சாமியார்கள் அவர்களிடம் திருவண்ணாமலை யின் பெருமைகளையும் சிறப்புகளையும் கூறி அவர்களின் ஆசைகளை தூண்டி இங்கு பெருமளவு வர வைக்கின்றனர். இந்தக் கோவிலை சுற்றி பல சித்தர்களும் இருப்பதால் அவர்களையும் காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் அந்த மாநிலங்களில் இருந்து பெருமளவு மக்கள் கூட்டங்கள் திரண்டு வருகிறது. இவ்வாறு அதிக அளவில் மக்கள் கூடி வருவதினால் திருவண்ணாமலையில் எப்போதும் போல் இல்லாமல் வியாபாரம் அதிக அளவில் பெருக்கெடுத்துள்ளது. இதனால் நம் மாநிலத்தின் வருமானம் அதிகரிக்கும் நன்மை இருந்தாலும் கூட அவ்வாறு பிற மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.