24 special

படித்து படித்து சொல்லியும் கேட்காத டிரம்ப்! இந்தியாவில் கூகுளுக்கு பதில் தமிழனின் பிரவுசர்!அமெரிக்காவின் மொத்த கதையும் ஓவர்

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்தது மற்றும் எச் 1பி விசாவின் கட்டணத்தை உயர்த்தி இந்திய ஐடி ஊழியர்களை அமெரிக்காவுக்கு செல்வதை தடுப்பது உள்ளிட்டவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.


ரயில்வே துறையில் மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களின் பிளாட்பார்ம்களை பயன்படுத்துவதற்கு பதில் இந்தியாவின் ஜோஹோ நிறுவனத்தின் பிளாட்பார்ம்களை பயன்படுத்த உள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடியாக அறிவித்துள்ளார். உள்ளூர் பொருட்களுகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வைத்த கோரிக்கையை ஏற்று அஸ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‛‛நான் ஜோஹோவை நோக்கி நகர்கிறேன். எனது டாக்குமென்ட்ஸ், ஸ்பிரிட்ஷீட் மற்றும் பிரசென்டேஷன் உள்ளிட்டவர்களுக்கு ஜோஹோ நிறுவனத்தின் பிளாட்பார்மை பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்.அதேபோல் பிரதமர் மோடியின் சுதேசி அழைப்பில் அனைவைரும் சேர்ந்து இந்திய தயாரிப்பு மற்றும் சேவைகளை பயன்படுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இதனை ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நன்றி தெரிவித்து வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛"நன்றி சார், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வரும் எங்கள் இன்ஜினியர்களுக்கு பெரிய மன உறுதியை வழங்கும். நாங்கள் உங்களைப் பெருமைப்படுத்துவோம். நம் தேசத்தை பெருமைப்படுத்துவோம். ஜெய் ஹிந்த்" என்று கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம் சற்று ஆட்டம் கண்டுள்ளது. 

ஏனென்றால் உலக மக்கள் தொகையில் 150 கோடி மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் அவர்கள் பயன்படுத்தப்படும் பிரவுசர் என்றால் அது கூகுள் தான். தற்போது அது ரயில்வே துறையில் மாற்றப்பட உள்ளது இந்தியாவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து துறை ரயில்வே துறை தான் எனவே அதில் முதலில் மாற்றம்  கொண்டு வந்தால் காலங்கள் செல்லச் செல்ல அனைவரும் தமிழனின் தயாரிப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான் திட்டம்

மேலும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய ஜோஹோ நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு மற்றும் டோனி தாமஸ் ஆகியோரால் கடந்த 1996ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365 (Microsoft Office 365) மற்றும் கூகுள் வொர்க்ஸ்பேஸ்(Google Workspace) போன்ற தயாரிப்புகளை ஜோஹோ நிறுவனமும் ஜோஹோ வொர்க்பிளேஸ் (Zoho Workplace)மற்றும் ஜோஹோ ஆபிஸ் சூட் (Zoho Office Suite)வழங்கி வருகிறது.

இப்போது இந்த ஜோஹோ நிறுவனம் தற்போது முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனம் பிசினஸ், Spanning இமெயில், எச்ஆர், அக்கவுண்ட்டிங், சிஆர்எம், புராஜெக்ட் மேனேஜ்மென்ட் உள்பட 80 க்கும் அதிகமான கிளவுட் அடிப்படையில் டூல்ஸ்களை (cloud-based tools) வழங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி ஜோஹோ தொடக்கம் முதலே 'Made in India' கொள்கையை கொண்டுள்ளதோடு, கிராமப்புற மாணவ-மாணவிகளை ஐடி துறையில் ஜொலிக்க வாய்ப்பு வழங்கி வருகிறது. இதனை அடிப்படையாக வைத்து தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் உள்ள ஜோஹோ ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஜோஹோ நிறுவனம் ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டி வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவிலும் இந்த நிறுவனம் இஙய்கி வருகிறது. ஜோஹோ நிறுவனத்தின் தயாரிப்புகளை 150க்கும் அதிகமான நாடுகளில் 100 மில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.