
இந்தியாவை தவிர்த்து உலகம் இயங்காது! அமெரிக்கா ஒப்புதல் வாக்குமூலம் கொண்டது! உண்மை வெளியானது!
இன்று உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும் வல்லரசாக இந்தியா மாறியுள்ளது. நம் தேசத்தின் குரலை புறக்கணிக்க முடியாத நிலைமைக்கு சர்வதேச சமூகம் இறங்கி வருகின்றது. இதை நிரூபிக்கும் வகையில் நியூயார்க் நகரில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பேச்சுவார்த்தை அமைந்துள்ளது.. இந்த சந்திப்புக்குப் பின் ரூபியோ, “இந்தியாவுடன் உள்ள உறவு அமெரிக்காவிற்கு மிகவும் அவசியமானது” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார் .
கடந்த சில மாதங்களாக இருநாடுகளுக்கிடையே சில வர்த்தக போர் பதற்றங்கள் நிலவி வருகின்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தது வர்த்தக உறவுகளை சிக்கலாக்கியது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை தான் நிறுத்தியதாக அவர் தொடர்ச்சியாகக் கூறியிருப்பது நம் தேசத்தின் சுய மரியாதையையும் உலகத்தில் நிலைபெற்ற கண்ணியத்தையும் பாதிக்கக் கூடியதாக இருந்தது. இந்தியா இதை உறுதியாக மறுத்து தனது நிலைப்பாட்டை உலகிற்கு தெளிவாகச் சொன்னது.
இத்தகைய சூழலில், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்காமல், நம் சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அனுப்பினார். உலக மேடையில் இந்தியாவின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக அவர் சென்று, நம் தேசத்தின் கண்ணியத்தையும் தேசிய நலன்களையும் பாதுகாக்கும் விதமாக வலுவான பேச்சுவார்த்தை நடத்தினார். நியூயார்க் நகரில் ரூபியோவை சந்தித்தபோது, வர்த்தகம், வரி, விசா கட்டண உயர்வு, உலகளாவிய பாதுகாப்பு நிலைமை போன்ற முக்கிய பிரச்சினைகள் அனைத்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.
இந்த சந்திப்பு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர், “நியூயார்க்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்ததில் மகிழ்ச்சி. பல்வேறு இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடந்தன. எங்களது உறவு தொடரும்” என்று குறிப்பிட்டார். மேலேயும் இது சந்திப்பு குறித்து மார்கோ ரூபியோ கூறியதாவது ; இந்தியா உடனான உறவுகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததவை தெரிவித்துள்ளார்.
உலக அரசியலில் இந்தியாவை புறக்கணிக்க முடியாது என்பதே இந்த சந்திப்பு வெளிப்படுத்தும் மிகப் பெரிய உண்மை ஆகும் . இன்று இந்தியா, தன்னம்பிக்கையுடன் முன்னேறும் வல்லரசாக மட்டுமின்றி, பிற நாடுகளின் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உயர்ந்துள்ளது. உலக அரங்கில் நடைபெறும் எந்த முக்கிய ஆலோசனையும் இந்தியாவைத் தவிர்த்து நிறைவேறாது என்பதையும் அமெரிக்காவின் இந்த வாக்குமூலம் உறுதி செய்கிறது.
இது நம் தேசத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம். பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியா, அரசியல் ரீதியாகவும் தன் நிலையை உறுதியாக்கிக் கொண்டிருப்பதை உலக நாடுகள் வியப்புடன் காண்கின்றன. சவால்கள் இருந்தாலும், வலிமையான தலைமைத்துவத்துடன் இந்தியா முன்னேறி, தனது தேசிய நலன்களை உலக மேடையில் உரக்கச் சொல்லி வருகிறது.
இந்த சந்திப்பின் மூலம் இன்னுமொரு முறை தெளிவானது – இந்தியாவை இன்றி உலக அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு குறித்து எந்த பெரிய முடிவும் எடுக்க முடியாது. நம் தேசத்தின் பெருமை உயர்ந்து நிற்கும் இந்த தருணம், ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் தேசபற்றை பெருமையுடன் ஒலிக்கச் செய்கிறது