24 special

செங்கடலில் துருக்கிக்கு ஆப்பு… இந்தியாவுக்கு மாஸ் அட்வான்டேஜ்! உருவான இஸ்லாமிய நாடு உலக அரசியலில் புதிய திருப்பம்

PMMODI,RECEPTAYYIPERDOGAN
PMMODI,RECEPTAYYIPERDOGAN

செங்கடல் அரசியலில் இதுவரை ஆட்டத்தை இழுத்தது துருக்கி என்றால், அந்த ஆட்டத்திற்கு ஆப்பு விழுந்துள்ளது. சோமாலிலாந்தை தனிநாடாக அங்கீகரித்துள்ள இஸ்ரேலின் அதிரடி முடிவு, ஒரே நேரத்தில் துருக்கியின் ஆப்பிரிக்க கனவுகளுக்கு ஆப்பாகவும், இந்தியாவின் இந்திய பெருங்கடல் வியூகத்திற்கு மாஸ் பலமாகவும் மாறியுள்ளது.


ஏடன் வளைகுடா, செங்கடல், இந்திய பெருங்கடல் – இந்த மூன்று கடல் வழிகள் சந்திக்கும் இடத்தில்தான் சோமாலிலாந்து நிற்கிறது. இது வரைபடத்தில் ஒரு சிறிய பகுதி போல தெரிந்தாலும், உலக வர்த்தகத்தின் உயிர்நாடி இந்த வழியாகத்தான் ஓடுகிறது. இந்த இடத்தில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அவர்கள்தான் கடல் அரசியலை தீர்மானிப்பவர்கள்.

இதுவரை அந்த இடத்தில் துருக்கி தன் கொடியை நாட்ட முயன்றது. சோமாலியாவில் ராணுவ தளம் அமைத்து, ஆப்பிரிக்காவிற்குள் மெதுவாக நுழைந்து, செங்கடலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே துருக்கியின் நீண்டகால திட்டம். ஆனால் அந்த திட்டத்துக்கு இப்போது நேரடி தடையாக சோமாலிலாந்து மாறியுள்ளது. இஸ்ரேலின் அங்கீகாரம் என்பது ஒரு ராணுவ சிக்னல்.

இந்த நகர்வு இந்தியாவுக்கு ஏன் முக்கியம் என்பதை மத்திய மோடி அரசு கவனமாக பார்த்து வருகிறது. சமீப காலமாக செங்கடல் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்கள், சீனா, துருக்கி என பல சக்திகள் களமிறங்கியுள்ள நிலையில், அந்தப் பகுதியில் ஒரு நம்பகமான, தீவிரவாதம் குறைந்த நட்பு பகுதி உருவாவது இந்தியாவுக்கு நேரடி ஆதாயம்.அதுவும்  இந்தியாவின் உற்ற நண்பன் அங்கிருந்தால் இந்தியாவுக்கு பலம் தான். 

மேலும் இதன் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியின் ஓமன், எத்தியோப்பியா, ஜோர்டான் பயணங்கள் இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றன. நிலப்பரப்பால் சூழப்பட்ட எத்தியோப்பியாவுக்கு வெளிநாட்டு வர்த்தகத்தின் உயிர்நாடி சோமாலிலாந்தின் பெர்பெரா துறைமுகம். அந்த துறைமுகம் பாதுகாப்பாக இருந்தால், இந்தியாவின் வர்த்தகமும், கடல் பாதுகாப்பும் ஒரே நேரத்தில் வலுப்பெறும்.

சோமாலிலாந்து மற்ற ஆப்பிரிக்க பகுதிகளிலிருந்து வேறுபடுவது இங்கேதான். பயங்கரவாத அமைப்புகளின் தாக்கம் குறைவு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சொந்த நாணயம், ராணுவ கட்டமைப்பு – எல்லாமே செயல்பாட்டில் உள்ளது. இதனால் தான் துருக்கி போன்ற நாடுகள் சோமாலியாவை தேர்ந்தெடுத்தது ஆனால் அந்நாடு துருக்கியை ஒதுக்கி வைத்து தான் பார்த்தது. ஏனென்றால் இஸ்லாமிய நாடக அறிவிக்க துருக்கி ஒப்புக்கொள்ளவில்லை இந்த நிலையில் தான் , இஸ்ரேல் சோமாலிலாந்தை தேர்ந்தெடுத்துள்ளது. 

இந்தியா உடனடியாக சோமாலிலாந்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், களத்தில் இந்தியா ஏற்கனவே சக்தியாக உள்ளது. சோமாலி கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையை பார்த்தாலே ஓடும் நிலை இன்று உள்ளது உண்மை. அந்த கடல் பகுதியில் இந்தியாவின் பெயர் ஏற்கனவே ஒரு பயமாகவும், மரியாதையாகவும் உள்ளது. இஸ்ரேலின் இந்த நகர்வு, அந்த சக்திக்கு இன்னொரு பாதுகாப்பு வளையத்தை சேர்த்துள்ளது.

இந்த மாற்றத்தால் மிகுந்த கவலையில் இருப்பது துருக்கி மட்டுமல்ல, சீனாவும் தான். ஜிபூதியில் சீன ராணுவ தளம் இருக்கும் நிலையில், அதற்கு அருகிலேயே இந்தியா–இஸ்ரேல் ஆதரவு பெற்ற ஒரு புதிய சக்தி உருவாவது, சீனாவின் கடல் வியூகத்திற்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. மொத்தத்தில்,செங்கடலில் துருக்கியின் ஆட்டத்திற்கு ஆப்பு விழுந்திருக்கிறது.இந்திய பெருங்கடலில் இந்தியாவின் கை மேலும் வலுப்பெற்றிருக்கிறது.சோமாலிலாந்து இன்று ஒரு சிறிய நிலம் அல்ல அது உலக அரசியலின் புதிய சாவி.