24 special

CDS பதவிக்கு பரிசீலனையில் இரு அதிகாரிகள்..!? மத்திய அரசு நியமிக்கப்போவது யாரை..?

Bipin
Bipin

புதுதில்லி : CDS எனும் பாதுகாப்புபடைத்தலைவர் பதவிக்கு 62 வயது பூர்த்தியடையாதபணியிலிருக்கும் அல்லது ஓய்வுபெற்ற  அதிகாரிகள் இருபிரிவினரும் பரிசீலக்கப்படலாம் என மத்திய அரசு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வர்த்தமானி அறிவிப்பில் "பாதுகாப்புத்துறை அமைச்சகம் CDS ஐ நியமிக்கையில் லெப்டினென்ட் ஜெனரலுக்கு இணையான அல்லது அதற்க்கு சமமான பதவியில் உள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவர்.


அதேபோல ஓய்வுபெற்ற அதிகாரிகளும் நியமிக்கப்படலாம். ஆனால் அதிகாரிகளுக்கு 62 வயதிற்குள்ளாக இருக்கவேண்டும். மத்திய அரசு பொதுநலன் கருதி பாதுகாப்புப்படைகளின் தலைமை அதிகாரியாக ஏர்மார்ஷலாக அல்லது ஏர்மார்ஷல் சீப்பாக பணியாற்றும் அதிகாரி அல்லது அதேபதவிகளில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் நியமிக்கப்படலாம்.

மத்திய அரசு தேவைப்பட்டால் பாதுகாப்புப்படை தலைவரின் சேவையை நீட்டிக்க அனுமதிக்கலாம். ஆனால் அதற்க்கு அதிகபட்ச உச்சவயது 65க்குள் இருக்கவேண்டும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் CDS  ஜெனரல் பிபின் ராவத் கடந்த டிசம்பரில் தமிழ்நாட்டில் உள்ள குன்னூர் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு பிறகு CDS பதவி காலியாக உள்ளது. 2019ல் மீண்டும் நரேந்திரமோடி பிரதமரானதும் நாட்டின் உயர்பாதுகாப்பு நிர்வாகத்தில் ஒரு முக்கிய சீர்திருத்தத்தை கொண்டுவந்தார். மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நான்கு நட்சத்திர ஜெனரல் தரத்தில் பாதுகாப்பு பணியாளர்களுக்கான தலைமை பதவியை உருவாக்க ஒப்புதல் அளித்திருந்தது. 

அதை தொடர்ந்தே CDS எனும் பதவி உருவாக்கப்பட்டு முதல் CDS ஆக மறைந்த தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். தற்போது அந்த பதவிக்கு ஆளுமைத்திறன் மிக்க நிர்வாகத்திறன் கொண்ட சிறந்த அதிகாரிகளை தேர்ந்தெடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அடுத்த சில மாதங்களில் நாட்டின் இரண்டாவது CDS பதவியேற்பார் என நம்பப்படுகிறது.