குஜராத் : இந்த வருட இறுதியில் குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும்நிலையில் ஆம் ஆத்மீ தேர்தல் பிரச்சார முன்னோட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடத்தப்பட்ட பேரணியில் தேசியக்கொடியை அவமதித்ததற்கும் பொதுமக்களை தாக்கியதற்கும் இருவேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை மாலை குஜராத் மாநிலம் மெஹ்சானா பழைய பேரூந்து நிலையத்திலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேசிய கொடியுடன் கலந்துகொண்டனர். இதுகுறித்து மெஹ்சானா காவல் ஆய்வாளர் படேல் ஒரு புகாரளித்துள்ளார். அதன்பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
படேல் தனது புகாரில் "மெஹ்சானா பழையபேருந்து நிலையத்தின் கேட் 1ல் இருந்து பிற்பகல் மூன்று மணியளவில் ஆம் ஆத்மீ தொண்டர்கள் பேரணியில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கு தேசிய கொடியை விநியோகம் செய்துகொண்டிருந்தனர். அந்நேரத்தில் பலர் தேசியக்கொடியை கீழேபோடுவதும் கால்களில் போட்டு மிதிப்பதையும் சில உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
தேசிய கொடியை அவமதித்த குற்றத்திற்காக அவரால் மீது சட்டப்பிரிவு 2 ன் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என படேல் தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து முகம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேனரை பிடித்த நபர்கள் மீது ஆம் ஆத்மீ குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து தாக்குதலுக்கு ஆளான பங்கஜ் மற்றும் க்ரிஷ் ஆகியோர் கூறுகையில் திங்கட்கிழமை அதிகாலை நாங்கள் குஜராத் குடிமக்கள் என்ற உரிமையில் கெஜ்ரிவாலிடம் கேள்வியெழுப்பி பதாகைகள் வைத்தோம். அப்போது அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த சிலர் ஏன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பதாகைகள் வைக்கிறீர்கள் என கூறி தாக்குதலில் ஈடுபட்டனர்" என தெரிவித்தனர்.
இந்த புகார் மீதான நடவடிக்கையின் பேரில் ஆம் ஆத்மீயை சேர்ந்த ஆஷிஷ் படேல், பகத், மஹாதேவ் மற்றும் தர்பார் ஆகிய நான்குபேர் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.