24 special

அமிட்ஷாவை ஒரு கை பார்க்க தயார்..கையில் வந்த பேப்பர் "சட்டியை" தயார் செய்ய சொன்ன வீரமணி..!

Veeramani
Veeramani

திராவிட கழக தலைவர் வீரமணி திராவிட இயக்கத்தினரை சந்திக்க மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்று பயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்து அதற்காக பல்வேறு ஊர்களில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.


இந்த சூழலில் வீரமணி செல்லும் கூட்டங்களில் வீரமணியின் பொது கூட்டத்தை பார்க்க வந்த ஆட்களை காட்டிலும் மேடையில் மட்டுமே அதிக ஆட்கள் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அது கோவை கூட்டத்திலும் உறுதியானது.



கோவையில் நீட் எதிர்ப்பு, புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு என்ற தலைப்பில் கடந்த 17-ம் தேதி மாநாடு ஒன்றிணை நடத்தினார் வீரமணி இதில் பறை இசையில் தொடங்கிய கூட்டத்தை பார்க்க அதிக நபர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் 100 நாற்காலிகள் போடப்பட்டன, ஆனால் கூட்டம் தொடங்கும் வரை நாற்காலி முழுமையாக நிரம்பவில்லை.

இது ஒருபுறம் என்றால் தொண்டர்களை காட்டிலும் மேடையில் தலைவர்கள் அதிகம் காணப்பட்டனர், இப்படி கூட்டத்தில் குறைவான நபர்கள் இருந்தாலும் கலங்காத வீரமணி உரையை தொடங்கி விடாமல் மத்திய அரசை விமர்சனம் செய்து வந்தார், ஒரு கட்டத்தில் மழை வரவே இனியும் கூட்டத்தில் எங்களால் செய்தி சேகரிக்க முடியாது முடியுங்கள் என லெட்டர் மூலம் பத்திரிகையாளர்கள் தெரிவிக்க.,

ஒரு வழியாக இறுதி சுற்றுக்கு வந்த வீரமணி நான் சென்னையில் தார் சட்டியை தயார் செய்து வைத்திருக்க சொல்லி இருக்கிறேன் சென்னை சென்றதும் எழும்பூரில் இந்தி எழுத்துக்களை அழிக்க போகிறேன் அமிட்ஷாவின் இந்தி திணிப்பு கருத்திற்கு பதிலடியாக இருக்க போவதாக தெரிவித்தார் வீரமணி.

காலம் எத்தனை மாறினாலும் இன்னும் தார் சட்டி, மைக் செட் என்ற பழைய காலத்தில் வீரமணி யோசிப்பது அந்த இயக்கத்தின் தொண்டர்களை சலிப்படைய செய்துள்ளது. மொத்தத்தில் வீரமணியின் தமிழக சுற்று பயணம் உப்பு சப்பில்லாத சாம்பார். வீரமணி பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.