டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவிற்கு அனைத்து மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, இதில் திமுகவின் கொள்கை எதிரி என கூறப்படும் பாஜகவிற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது, இந்த சூழலில் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் வீரமணி கலந்து கொள்ளாதது கடும் அதிருப்தியை பெரியாரிஸ்ட்கள் இடையே உண்டாக்கியுள்ளது.
சோனியா காந்தி, டி.ஆர்.பாலு, துரைமுருகன் என பலரை வைத்து ஒவ்வொரு அரங்காக திறந்த திமுக தலைவர் ஸ்டாலினால், ஆசிரியர் வீரமணியை அழைத்து சென்று ஒரு அரங்கை திறந்து வைக்க அழைப்பு கொடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் பெரியாரிஸ்ட் தரப்பினர்.
வீரமணி உள்ளிட்ட முக்கிய நாத்திகம் பேசும் தலைவர்கள் யாருக்குமே அழைப்பு கொடுக்க படாதது ஏன்? ஒரு வேலை பாஜகவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட தற்போது வீரமணி உள்ளிட்ட தலைவர்களுக்கு கிடைக்காமல் போனதன் மர்மம் என்ன எனவும் அவர்கள் ஆவேசமாக சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.
இது ஒருபுறம் என்றால் எப்போதும் திமுகவிற்கு இலவச ஆலோசனை வழங்கும் சுப. வீராபாண்டியணை கூட அளிக்காதது ஏன்? திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அழைக்கப்பட்ட போது பெரியாரிய தோழர்களை அழைத்து டெல்லியில் திமுக கட்டிடத்தில் ஒரு அரங்கை திறந்து வைக்க கோரதது ஏன் எனவும் வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர் பெரியாரிட்கள்.
இதற்கு இடையில் தமிழகத்தை சேர்ந்த திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பெரும்பாலான நபர்களுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை, முழுக்க முழுக்க தேசிய அரசியலை நோக்கிய காய் நகர்த்தல் எனவே அங்கு வீரமணி போன்றவர்களுக்கு வேலை இல்லை என்பதால் நிகழ்ச்சி நிரலில் அவர்களுக்கு எந்த அழைப்பும் கொடுக்கப்படவில்லை ஆனால் தலைவர் ஸ்டாலினின் இதயத்தில் வீரமணிக்கு நிச்சயம் இடம் இருக்கிறது என நம்மிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் அறிவாலய உடன் பிறப்பு ஒருவர்.