திராவிட கழக தலைவர் வீரமணி நீட் தேர்வை எதிர்த்து மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்று பயணத்திற்கு தயாராகி இருப்பதுடன் அதற்கான பயண அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார், வடிவேல் படத்தில் கைப்புள்ள தனியா போறாரு இனி எத்தனை தலை உருள போகிறதோ என்ற பட வசனத்தை போட்டு பாஜகவினர் வீரமணியின் பயணத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.
தனது சூறாவளி பயணம் குறித்து வீரமணி தெரிவித்தது பின்வருமாறு நீட் திணிப்புத் தேர்வின்மூலம் ஏழை, எளிய, கிராமாந்திர, ஒடுக்கப்பட்ட சமூகங்களான எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டதோடு, இந்தக் கொடுமையினால் 12 ஆம் வகுப்பில் மிக அதிகமான மதிப்பெண் வாங்கியவர்கள்கூட இத்தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற்று வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலையே நீடிக்கிறது! பரவலான அச்சத்தின் காரணமாக செல்வி அனிதா தொடங்கி, சுமார் 20 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட கொடுமையை நாடே அறியும்.
பெற்றோரே, உங்கள் பிள்ளைகளது எதிர்காலத்தைக் கருதி, ‘நீட்’ தேர்வை ஒழிக்கக் களம் காண வாருங்கள்; களத்திற்கு வர முடியாதவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுங்கள்!மக்கள் சக்திக்கு முன் மகுடங்கள் வளைந்துதான் ஆகவேண்டும்! நாங்கள் போராடுவது எங்களுக்காக அல்ல - உங்களுக்காக; உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்காக! மறவாதீர்!
மக்கள் சக்திக்கு முன் மகுடங்கள் வளைந்துதான் ஆகவேண்டும்; இது வரலாறு சொல்லும் பாடம் - அது உறுதி! உறுதி என இரண்டு முறை உறுதியளித்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார் வீரமணி மேலும் வீரமணி கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு ஆட்களை சேர்க்கவும், மக்கள் கவனம் உள்ள இடங்களை தேர்வு செய்யவும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு வீரமணி சார்பில் உத்தரவு சென்று இருக்கிறதாம்.
எல்லாம் சரிதான் கூட்டத்திற்கு ஆட்கள் வருவார்களா? இல்லை மூடிய அரங்கில் நிகழ்ச்சியை நடத்திவிட்டு செல்வார்களா? போன்ற பல கேள்விகள் இணையத்தில் எழுந்து வருகிறது. இதற்கு வீரமணியின் முதல் கூட்டமே பதில் அளிக்கும் வகையில் அமையும்.