பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான H. ராஜா தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டம் வெற்றியை கொடுத்துள்ளது, விரைவில் மசூதி போன்ற அமைப்பு இடித்து அகற்றவில்லை என்றால் அரசே நடவடிக்கை எடுக்கும் என்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.
அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டில் எம்.முகமது அலி என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி சம்சுல் பீவி பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியதோடு, விவசாய விளை நிலத்தில் ஒரு கட்டிடத்தை கட்டினார். முதலில் பலரும் குடியிருக்க வீடு கட்டுகிறார் என நினைத்து இருக்க அதன்பிறகு, அந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் கூம்பு வடிவ கோபுரங்களை அமைத்து மசூதிபோன்று மாற்றினார்.
இது அந்த ஊர் மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது அனுமதியின்றி மசூதி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் மற்றும் பாஜக சார்பில் கடந்த ஆண்டு மிக பெரிய போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டிசம்பர் 2021-க்குள் மசூதிபோன்ற அமைப்பு அகற்றப்படும் என அலுவலர்களால் உறுதி அளிக்கப்பட்டது. எனினும், இதுவரை அகற்றப்படவில்லை. இதைக் கண்டித்தும், இடித்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும் பாஜகதேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயிலில் இருந்து சம்பந்தப்பட்ட கட்டிடத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது புதுக்கோட்டை மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் வந்திருந்த காவல்துறையினர் H. ராஜா உள்ளிட்ட பாஜகவினரை தடுத்து நிறுத்தினர் அப்போது அரசு தரப்பில் வருகின்ற 12- ம் தேதிக்குள் மசூதி வடிவ அமைப்புகள் இடித்து அகற்றவேண்டும் அப்படி இல்லை என்றால் அரசே இடிக்கும் என அரசு அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தை பாஜகவினர் கைவிட்டனர், அரசு நிலத்தில் இருப்பதாக பல ஆண்டுகளாக இருந்த கோவிலை அகற்றும் அரசாங்கதால் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிட வடிவத்தை ஏன் இடிக்க முடியவில்லை என உரத்த குரலில் பேசினார் H.ராஜா , இதையடுத்தே விஷயம் முடிவிற்கு வந்துள்ளது. H.ராஜா போராட்டத்திற்கு வந்தார், சட்டவிரோத கட்டிட இடிப்பிற்கு நாள் குறித்தார், நாளை வேறு ஒரு போராட்டத்தில் ஈடுபடுவார் ரிபீட்டு என பாராட்டுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.