24 special

"ஆளுநருக்கு" பதில் கொடுக்க சென்று பேராசிரியரிடம் பதிலடி வாங்கிய வெங்கடேசன்..!

Rn ravi and venkatesh
Rn ravi and venkatesh

பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்திற்கு வரலாற்று சம்பவங்களை நினைவுப்படுத்தி பதிலடி கொடுத்துள்ளார்.


தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியதை ஆளுநர் மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது அதில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுந‌ர்,திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் சென்னை,ஸ்ரீ ராம் சமாஜத்தில் ராம நவமி விழாவை  தொடங்கி வைத்து  இன்றைய மிக முக்கிய காலத்தில்  நம்  நாடு அனைவரின் வளர்ச்சியையும்  உள்ளடக்கி ராமராஜ்யத்தை நோக்கி முன்னேறி வருவதை விளக்கினார் என குறிப்பிட்டு இருந்தது.

இதற்கு பதில் கொடுத்த சு.வெங்கடேசன் உங்கள் ராமராஜ்ஜியங்கள் ராஜ்பவனுக்குள்ளேயே இருக்கட்டும், அவை எப்போதும் ராஜ்பவனுக்கானவை மட்டுமே,இந்தியர்களுக்கானது அரசியல் சாசனமே, அந்தக் கனவே ஆளுநருக்கு தேவை  என பதில் கொடுத்து இருந்தார், இதற்கு "பேராசிரியர் ஸ்ரீனிவாசன்"  முறையாக பதிலடி கொடுத்துள்ளார்.

வெங்கடேசனின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு,  டியர் காம்ரேட்  வெங்கடேசன்  ராமராஜ்யம் என்று சொன்னது மேதகு ஆளுநர் அல்ல மகாத்மா காந்தி, மகாத்மாவின் வார்த்தைகளை மறுபடியும் நினைவு கூறுகிறார் ஆளுநர். அதில் என்ன தவறு? இந்தியாவில் ராமராஜ்யம் அல்லாமல் லெனின் ராஜ்ஜியமா வரமுடியும் காம்ரேட்..? என முறையாக காந்தி குறிப்பிட்ட வரலாற்றை நினைவு படுத்தி பதிலடி கொடுத்தார் பேராசிரியர் 

திமுகவிடம் கம்யூனிஸ்ட் கட்சியை அடகு வைத்த நபர்கள் ஆளுநருக்கு பாடம் எடுப்பது எல்லாம் தமிழகத்தில் மட்டுமே அரங்கேறும் "கூத்து" என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர், பாஜகவில் ஒவ்வொரு தலைவர்கள் ஒரு ரகம் என்றால் இலக்கியம், வரலாற்று சம்பவங்களை குறிப்பிட்டு அதே பாணியில் பதிலடி கொடுப்பதில் பேராசிரியர் தனி ரகம் என அவரது ஆதரவாளர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.