
தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறையின் கீழ் டாஸ்மாக் மதுவிற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தமிழகத்தில் இருமுறை சோதனை நடத்தியது. இந்நிலையில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ்-யிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பல முக்கிய தகவல்களையும், ஆதரங்களை வழங்கியிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதை வைத்து திமுகவின் அரசியல் வாரிசுக்கு தூண்டில் போட்டுள்ளது அமலாக்கத்துறை. மேலும், இது தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனின் தயாரிப்பின் கீழ் நடித்த பிரபலங்களிடம் விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிந்திருக்கும் அமலாக்கத்துறை, டாஸ்மாக் தலைமையகம், அம்பத்தூர் டாஸ்மாக் குடோன், சில மதுபான ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் கடந்த மார்ச் மாதம் அதிரடியாகச் சோதனைகளை நடத்தியது. கிட்டத்தட்ட மூன்று நாள்களுக்குத் தொடர்ந்த அந்தச் சோதனையில், ஏராளமான ஆவணங்களை அள்ளியதோடு, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடமிருந்து மூன்று கைப்பேசிகளையும் கைப்பற்றியது அமலாக்கத்துறை.டாஸ்மாக் மூலமாக வசூலிக்கப்பட்ட ஸ்வீட் பாக்ஸ்கள் யாரிடம் போனது எனத் துருவியிருக்கிறார்கள். ரெய்டுக்கு உள்ளான அனைத்து இடங்களிலிருந்தும் ஏகப்பட்ட ஆவணங்களையும் அள்ளிச் சென்றிருக்கிறார்கள்.
விசாகன் ஐஏஎஸ் வீட்டில் அவரிடமும் அவரது மனைவியிடமும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது அப்போத சென்னை எம்ஆர்சி நகரில் வசிக்கும் ரத்தீஷ் என்பவர் உடன் விசாகன் ஐஏஎஸ் தொடர்பில் இருந்ததாகவும், எந்த மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டுமென ரத்தீஷ் விசாகனுக்கு அறிவுறுத்தியதாக சில வாட்ஸப் ஸ்கிரீன்ஷாட்களும் சிக்கியது.
மேலும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனை குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாக இருக்கிறார். மேலும் ரத்தீசும் தற்போது தலைமுறைவாகியுள்ளார். இந்த நிலையில் ரத்தீஷ் திமுக இளைஞரணி தலைவரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்
இது ஒரு புறம் இருக்க விசாகன் ஐஏஎஸ் இடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போன் லேப்டாப் ஆகியவற்றில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், முறைகேடு தொடர்பாக பல்வேறு தகவல்களை விசாகன் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சொல்லி இருக்கலாம் என தகவல் உலாவுகிறது. ஆனால் அதனை திமுக தரப்பு மறுத்து வருகிறது. மேலும், தனியார் வங்கி அதிகாரிகள், டாஸ்மாக் இயக்குனர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கூடுதலாக கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இதனை வைத்து திமுக வாரிசு புள்ளி ஒருவரை வளைக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
டாஸ்மாக் முறைகேடு பணம் தான் ஆகாஷ் பாஸ்கரன் மூலம் சினிமா தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், தற்போது உதயுடன் செந்தில் பாலாஜியை சந்தித்த வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் டான் பிக்சர்
கீழ் நடித்த நடிகர், நடிகைகளிடம் பணம் எப்படி பெறப்பட்டது, பண பரிமாற்றத்தின் வகை ஆகியவை குறித்தும் விசாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வரும் நாட்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்களுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பும் என்கின்றனர் விவரம் அறிந்த அதிகாரிகள். இப்படி, உதயநிதிக்கு நெருக்கமான வட்டத்தைச் சேர்ந்தவர்களை அமலாக்கத்துறை குறிவைத்துக் களமிறங்கவும், அதிர்ந்துபோய்விட்டது கோபாலபுர குடும்பம்!