புதுதில்லி : சீனத்தொற்று உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது. அமேரிக்கா ஜெர்மன் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் சீனத்தொற்றை தடுக்க முடியாமல் திணறியபோது மத்திய மோடி அரசு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கியது. 130 கோடி மக்களை காப்பற்றிய பிரதமரை பாராட்ட மனமில்லாமல் தரமற்ற வகையில் காங்கிரஸ் விமர்சித்து வருவதாக பிஜேபியினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
இதனிடையே நாட்டில் அதிகப்படியான கொரோனா வைரஸ் இறப்புகள் குறித்து உலக சுகாதார மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் கோவிட் 19 ஆல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் 47 லட்சம் என குறிப்பிட்டிருந்தது. இதை கட்டியாக பிடித்துக்கொண்ட காங்கிரஸ் இளவரசர் " அறிக்கை பொய்சொல்லும் ஆனால் அறிவியல் பொய்சொல்லாது.
கோவிட் நோயால் 47 லட்சம் இந்தியர்கள் மரணமடைந்துள்ளனர்.அரசு கூறுவதுபோல 4.8லட்சம் அல்ல. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்" என கூறியிருந்தார். இதற்க்கு பதிலடி கொடுக்கும்வகையில் பிஜேபி தலைவர் சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் " கொரோனா வைரஸால் இறந்தவர்களை கணக்கிடும் WHOவின் வழிமுறைகளில் குறைபாடுகள் உள்ளது.
இந்தியாவில் பிறப்பு இறப்புகளின் பதிவுக்கான வழிமுறை வலுவாக உள்ளது.WHO வின் தரவுகளும் காங்கிரஸ் பேட்டாவின் அறிக்கையும் தவறானவை. 2014 முதல் காங்கிரஸ் தலைவர் பிரதமர் மோடியின் இமேஜை குறைக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறார். இந்த செயல்பாடுகளால் இந்தியாவின் மதிப்பை குறைத்துவிட்டார்" என ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.