24 special

36000 கோடி மதிப்புகளில் போர்க்கப்பல்கள்..! இந்திய கடற்படையின் பலே திட்டம்..!


புதுதில்லி : இந்தியா வல்லரசு ஆவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் மிகவேகமாக இந்திய அரசு முன்னெடுத்துவருகிறது. அந்தவகையில் குறிப்பிட்டு சொல்லும்படியாக உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிடம் ஆயுதங்கள் ஏவுகணைகள் உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபடுகையில் 30 சதவிகிதம் பங்குகள் அல்லது அதன் தயாரிப்புகள் இந்தியாவிடமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் 36000 கோடி மதிப்பில் இந்திய கடற்படை எட்டு கப்பல்களை தயாரிக்க முடிவுசெய்துள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான டி ஏ சியிடம் அதற்கான அனுமதியை கோரியுள்ளது இந்திய கடற்படை. மேலும் 1500 முதல் 2000 டன் எடையுள்ள கொர்வேட்டுகள் இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தயாராக உள்ளது.

இந்த சவால் மிகுந்த திட்டம் பாதுகாப்பு கவுன்சிலால் (DAC) அங்கீகரிக்கப்படுமானால் நமது இந்திய கப்பற்படைக்கு இது மேலும் ஊக்கத்தை தரும் என கப்பற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரமாண்டமான எட்டு போர்கப்பல்களை தயாரிக்கும் இந்த திட்டத்தில் MSME , ஆத்மநிர்பர் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முனைவோர்கள் ஈடுபடவிருப்பதால்  வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் இந்தியாவின் சுயசார்பு பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் என கருதப்படுகிறது.

இத கார்வேர்டுக்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் 6.4 சதவிகிதம் அளவிற்கு உள்நாட்டு தொழில் வளர்ச்சி மேம்படும் என தெரிகிறது. இந்த போர்க்கப்பல்கள் தயாரிப்பில் கொச்சி மும்பை மற்றும் கொல்கொத்தா பகுதிகளில் உள்ள கப்பல்கட்டும் தளங்கள் நேரடியாக போட்டியில் இறங்குவதால் ஏலத்தின் அடிப்படையில் போர்க்கப்பல்கள் தயாரிக்க ஒப்பந்தம் போடப்படும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான குழு அனுமதி அளிக்கும்பட்சத்தில் ஒரேநேரத்தில் எட்டு போர்கப்பல்களை தயாரித்த பெருமை இந்தியாவை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சிலதினங்களுக்கு முன்னர் ஐ.என்.எஸ்.கோமதி, ஐ.என்.எஸ் அக்சய், ஐ.என்.எஸ் நிஷாங் ஆகிய போர்க்கப்பல்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது. அதனால் இவற்றிற்கு மாற்றாகவும் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த எட்டு போர்க்கப்பல்களும் தயாரிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.