புதுதில்லி : உக்ரைன் ரஷ்யா மோதலை தொடர்ந்து ரஷ்யா மீது ஐரோப்பா உட்பட சில நாடுகள் பொருளாதார தடைவிதித்ததோடு இந்தியாவையும் ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்ய கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்க்கு காட்டமான பதிலடி கொடுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் மறைமுகமாக வர்த்தகம் செய்துவருவதை பொதுக்கூட்டத்தில் அம்பலப்படுத்தியதோடு எங்கள் உரிமைகளில் தலையிட யாருக்கும் அனுமதியில்லை என கடுமையாக பேசியிருந்தார்
இந்நிலையில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் இந்தியாவுடனான வர்த்தகத்தில் சமீபகாலமாக முன்னேறிவருகிறது. இந்த நிதியாண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இதையெல்லாம் உற்றுநோக்கிய ஐரோப்பா இந்தியாவுடன் நெருக்கத்தை காண்பிக்க முயற்சி செய்துவருகிறது அதன் ஒருபகுதியாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இருநாட்டு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவலை எழுப்பப்பட்டது.
ஐரோப்பா கூறுகையில் " உற்பத்தி மற்றும் மூலதன பொருட்களுக்கு சீனாவை மட்டுமே நம்பியிருக்க நாங்கள் தயாரில்லை. சில முக்கியமான உற்பத்திகளை இந்தியாவிடமிருந்து ஐரோப்பா பெற்றுக்கொள்ள நினைக்கிறது. அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டது. அடுத்த பாத்து வருடங்களில் நாங்கள் சீனாவை நம்பியிருக்கும் நிலையிலிருந்து வெளியேறிவிடுவோம். அவர்களுடன் வர்த்தகத்தில் ஒரு நிலையற்ற தன்மை காணப்படுகிறது.
அவர்ளுக்காக நாங்கள் எங்கள் நாட்டை அசௌகரியத்தில் ஆழ்த்த நாங்கள் விரும்பவில்லை" என் பிரெஞ்சு தூதரான இம்மானுவேல் லினென் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் பிரெஞ்சு தலைவரான இந்தியா வந்திருந்தார்.
அவர் நேரடியாக பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் வலுப்பட வர்த்தகத்தை மேம்படுத்த கோரிக்கை வைத்தார். மேலும் கடந்த நிதியாண்டில் 96 பில்லியன் யூரோவாக இருந்த வர்த்தகம் தற்போது மேலும் சரிவை கண்டுள்ளது.
ஐரோப்பாவில் நடைபெறும் எந்த கூட்டமானாலும் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வந்த ஐரோப்பா என்ற பூனைக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் மாணிக்கட்டியது பிரதமர் மோடிதான் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.