
வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சி திமுக படு தோல்வியில் இருந்து தப்பிக்க “ஓரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் ஜூலை 1-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வீடாக சென்று சந்தித்து வருகின்றனர் திமுகவினர். 45 நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இத்தகைய சந்திப்பின் மூலம் 30% புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.. அதாவது 1 கோடி வீடுகளுக்கு சென்று 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதும் ஸ்டாலின் பிறப்பித்த கட்டளை.முதல்வர் வேலையை விட கட்சி வேலையை திறம்பட செய்கிறார் என பொதுமக்களே கூறி வருகிறார்கள்.
இது ஒருபுறம் என்றால் கூட்டணி வலுவாக இருப்பது போன்ற தோற்றத்தை தி.மு.க., ஏற்படுத்த முயன்றாலும், அதிலிருக்கும் கட்சிகள், கூடுதல் தொகுதிகளுக்காக, தேர்தல் நெருக்கத்தில் அணி தாவும் வாய்ப்பு இருப்பதால், தனித்து போட்டியிட தயாராவது குறித்து தி.மு.க., ஆலோசித்து வருகிறது.கடந்த 2019 லோக்சபா தேர்தலில் இருந்து, தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட்கள், வி.சி., - ம.தி.மு.க., மற்றும் முஸ்லிம் இயக்கங்கள் இருந்து வருகின்றன.அடுத்தடுத்த தேர்தல்களிலும், இதே கூட்டணிக்கு வெற்றி கிடைத்து வருவதால், வரும் சட்ட சபை தேர்தலுக்கும் கொண்டு செல்ல தி.மு.க., தலைமை விரும்புகிறது.
தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகள், அரசியல் ரீதியாக சில நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.ஆளும் தரப்பிலும், அதிகார மட்டத்திலும் முக்கியத்துவம் இல்லாததோடு, தேர்தலுக்கு தேர்தல் தொகுதிக்காக போராட வேண்டிய நிலையும், குறைந்த தொகுதிகளையே கொடுப்பதால், கட்சியினரை திருப்திபடுத்த முடியாத சோகமும் நீடிப்பதாக கருதுகின்றன.
ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க., இருந்தபோதும், கூட்டணி கட்சியினருக்கு, அரசு பதவிகள் எதுவுமே கிடைக்கவில்லை. அது கிடைத்தாலாவது, கட்சியினரின் அதிருப்தியை போக்க முடிந்திருக்குமே என்ற எண்ணமும், வருத்தமும் கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது.ஒரே இடத்தில் ரொம்ப நாட்களாக இருப்பதே இதற்கு காரணம் என்றும், அவை நம்புகின்றன.குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, தி.மு.க., மீதும், ஆட்சி மீதும் ஆழமான அதிருப்தி இருக்கிறது.
மதிமுவிற்குள் கட்சிக்குள் புகுந்து அரசியல் செய்யும் அளவுக்கு தி.மு.க.போய்விட்டது , எந்த முடிவையும் எடுக்க விடாமல் வைத்திருப்பதாகவும் , திருமாவளவன் உள்ளுக்குள் புலம்புவதாக கூறப்படுகிறது.மற்றொரு கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்களுக்கும் இதே அதிருப்தி இருக்கிறது.அடுத்ததாக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும், தி.மு.க., தலைமை மீது புழுக்கத்தில் இருக்கிறார்.தி.மு.க., அனுதாபியாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இருந்தாலும், அவரது டில்லி தலைவர்கள் அப்படி இல்லை. அதிக சீட் கொடுத்தால் மட்டுமே, தி.மு.க., கூட்டணியில் தொடர வேண்டும்.இல்லையேல், விஜய் அமைக்கும் புதிய கூட்டணிக்கு செல்ல வேண்டும் என, வெளிப்படையாகவே பேசத் துவங்கி விட்டனர்.
இப்படி கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் அதிருப்தியில் இருப்பதும், அலப்பரை செய்வதும், ஆளுங்கட்சிக்கு பெரிய நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. அதையெல்லாம் சமாளித்து, வேறு வழிகளில் சரிக்கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.இதற்கிடையில், உள்துறை தந்த ரிப்போர்ட், அந்த நம்பிக்கையை தகர்த்து விட்டதாக தெரிகிறது. அதிக தொகுதிகள், ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு, நடிகர் விஜய் பக்கம் சாய, கூட்டணி கட்சிகள் சில, நாள் பார்த்து வரும் தகவல், ஆளும் தலைமையை அதிர வைத்துள்ளது.
இதையடுத்து உருவானவதே, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசார திட்டம். கூட்டணி பேரத்தையும், அணி மாறும் வாய்ப்பையும் முறியடிக்க, தனித்து களம் காணும் நோக்கில் தயாரானது தான் இந்த பிரசார இயக்கம் என்கிறது,என்ன தான் திமுக யோசித்தாலும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தால் மொத்தமா கதை முடிந்து விடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!