
உலகின் ஒவ்வொரு மூலையிலும் மோடியின் பெயர் அடிபட தொடங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்க இந்தியா வர்த்தகபோர் தான் காரணம்.உலகம் கொரானா பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் தவித்திருந்த காலத்தில் உக்ரைன் அப்போதைய அமெரிக்க அதிபர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவை வம்பிழுத்தது. நோட்டா அமைப்பில் சேருவோம் என ரஷ்யாவுக்கு சவால் விட்டது. இந்தநிலையில் தான் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில், உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது.இதனையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தன.
நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த, தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை ரஷ்யா வழங்க முன்வந்தது. இந்த வாய்ப்பை விரைவாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தொடங்கியது.இதனால் இந்தியாவின் பொருளாதரமும் நிலையான வளர்ச்சி பெற்று வந்தது. உலக பொருளாதாரமே வீழ்ந்து கிடந்த நேரத்தில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கியே சென்றது. இது எப்போதும் போல் அமெரிக்காவுக்கு எரிச்சலை ஊட்டியது. இதனை தொடர்ந்து ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையில் ரஷ்ய தயாரிப்பான எஸ்-400 ஏவுகணைகள் மற்றும் இந்தியாவின் ஆகாஷ் , பிரோமோஸ் ஏவுகணைகள் சிறப்பாக செயல்பட்டன, சுமார் 300 கி.மீ. தொலைவில் பறந்து கொண்டிருந்த பாகிஸ்தானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இவ்வளவு தொலைவில் பறந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது, உலக வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். இதனால் ரஷ்யா மற்றும் இந்திய ஆயுதங்களுக்கு மவுசு கூடியது பல நாடுகள் இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரோமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டின. இது அமெரிக்காவால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனை தொடர்ந்து ரஷ்யாவின் பொருளாதரத்தை முடுக்க இந்தியா மீது வரியை திணித்தது அமெரிக்கா. ஆனால் அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை இந்தியா.
இதனை தொடர்ந்து ஆபத்து காலத்தில் உதவுவனே நண்பன் அந்த உதவியை ரஸ்யாவுக்கு இந்தியா செய்துள்ளதால் இந்தியாவுக்கா டிரம்ப்பிடம் பேச வந்தார் விளாமிடிர் புடின். எல்லாரும் அமெரிக்கா சாதித்துவிட்டது என நினைத்திருந்த வேளையில் அதிபர் புடின் டிரம்பை மண்டியிட செய்தார்.
எந்த ஒப்பந்தமும் இல்லை- போர் நிறுத்த அறிவிப்பும் இல்லை. மேலும் எந்த உத்தரவாதத்தையும் புதினிடம் பெறாமல் வெறும் கையுடன் ட்ரம்ப் அமெரிக்காவுக்குத் திரும்பியிருக்கிறார்.
மேலும் மூன்று மணி பேச்சுவார்த்தைக்குப் பிறகு ட்ரம்பும், புதினும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். வெள்ளை மாளிகை நடைமுறைக்கு மாறாக, எந்த வித முன்னுரையும் தருவதற்கு முன்பாகவே, முதலில் புதின் பேசத் தொடங்கினார்.இது டிரம்ப் க்கு பெருத்த அவமானம் ஆகும். புதினை பொறுத்தவரை, உக்ரைன் தனி சுதந்திர நாடாகவும், நேட்டோ உறுப்பு நாடாகவும் இருக்கக் கூடாது. நேட்டோ அமைப்பே பலவீனமாக வேண்டும் என்பது தான் நோக்கம்.ட்ரம்பை பொறுத்தவரை, உக்ரைனின் கனிமவளங்களில் புதினுக்கு பாதி, தனக்குப் பாதி என்பதே கணக்காக உள்ளது. இதில், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில், ட்ரம்புடனான DEAL-யை புதின் வெற்றிகரமாக முடிப்பார் என்றே புவிசார் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அலாஸ்கா பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படாத நிலையில், இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிக்குமா ? என்ற கேள்விகள் எழுப்பப் படுகின்றன. இந்த நிலையில் தான் ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் இருக்கின்றன. இந்தியா மட்டும் சுமார் 40 சதவிகித எண்ணெய் வாங்குகிறது. இந்த நாடுகளின் மீது இரண்டாம் கட்ட வரி விதிக்கப்பட்டால், அது உலகுக்கே மிகப்பெரிய இழப்புதான். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பது குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்கப் போவது கிடையாது. வரி விதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.