24 special

பாஜக செய்த சம்பவம்... மிரண்டு போன திமுக அமைச்சர்கள்..!

modi , stalin
modi , stalin

இதுநாள் வரை நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக திமுக பல வழக்குகளில் சாதித்து வந்து இருக்கிறது அதிமுகவை சேர்ந்த ஜெயலலிதா முதல்வர் பதவியை இழப்பதற்கும் சிறை செல்வதற்கும் திமுக தொடர்ந்த வழக்குகளே காரணம்.அந்த வகையில் தற்போது ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிராக எதிர் கட்சியான அதிமுக அமைதியாக இருக்கும் நிலையில் கனவிலும் எதிர்பாரத சம்பவத்தை நீதிமன்றம் மூலம் சத்தமில்லாமல் நடத்தி காட்டி இருக்கிறது தமிழக பாஜக.


சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி ஆகியோரை கீழமை நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக விடுவித்தனஇதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார். இதற்கு எதிராக அமைச்சர் பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்நிலையில் இவ்வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக ஒரே போல அவசரகதியில் முடித்து வைக்கப்படுகின்றன. மேல்முறையீடும் செய்யப்படுவதில்லை.இது அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதாக உள்ளது. தமிழக அரசு விசாரணை அமைப்புக்களின் இந்தப் போக்கு பொதுமக்களிடையே பலத்த நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.

நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் இந்த விசாரணையைத் தடுக்கும் பொருட்டு, அவர் இந்த வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்றும் கோரி, திமுக தரப்பு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுகவினர், நீதியரசரை அவதூறாகப் பேசுவது உட்பட தொடர்ந்து நெருக்கடிகள் கொடுத்து வருகின்றனர்.அமைச்சர் பொன்முடி, தனக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரியும், இடைக்காலத் தடை கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் . தங்கம் தென்னரசு ஆகியோரும் உச்சநீதிமன்றத்தை நாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.திமுக அமைச்சர்களுக்கு எதிரான இந்த சொத்துக் குவிப்பு வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, இந்த வழக்குகளில் தமிழக பாஜகவின் கருத்துக்களை உச்ச நீதிமன்றம் கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளோம்.

அதிகார பலத்தில் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளை முடக்கி, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் நிறைவேறாது.திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சருக்கும் எதிராக சட்டப் போராட்டம் நடத்தி, அவர்களுக்கு சட்டரீதியான தண்டனை கிடைப்பதை தமிழக பாஜக நிச்சயம் உறுதி செய்யும்” என்று கூறியுள்ளார்.எப்படியும் நீதிமன்றத்தில் தப்பித்து விடலாம் என கணக்கு போட்டு செயல்பட்ட திமுக அமைச்சர்கள் கனவில் கேவியட் மனு மூலம் திமுக எதிர்பாரத நேரத்தில் ஆப்பு வைத்து இருக்கிறது பாஜக.

இனி பாஜகவின் கருத்தை கேட்காமல் அமைச்சர்கள் வழக்கில் தீர்ப்பு வழங்க கூடாது என்பதால் மூன்று அமைச்சர்களும் அவர்கள் தொடர்புடைய நபர்களும் தங்கள் எதிர் காலம் என்ன ஆக போகிறதோ என இப்போதே தலையில் அடித்து கொண்டு புலம்ப தொடங்கி இருக்கிறார்களாம். அன்று ஜெயலலிதாவிற்கு திமுக செய்ததை இன்று திமுகவிற்கு அண்ணாமலை நீதிமன்றம் மூலம் சம்பவம் செய்து இருக்கிறார்.