தமிழக நிதி அமைச்சர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆடு என ஏளனம் செய்ய, அதற்கு அண்ணாமலை நான் விவசாய குடும்பத்தில் வந்த எளியவன் என்றும் எதற்கும் அஞ்சாதவன் என்றும் உங்களை நோக்கி செருப்பு எறிய சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் எனது செருப்பு மதிப்பு இருக்கிறது எனவும் அதிரடியாக ஏளனமாக பதிவிட்ட அமைச்சருக்கு பதிலடி கொடுத்தார்.
இந்த பதிவு அரசியல் அரங்கில் அதிர்வுகளை உண்டாக்கிய நிலையில் என்னை தரக்குறைவாக பேசினால் நான் பதிலடி கொடுப்பேன், அடித்தால் திருப்பி அடிப்பேன் என அண்ணாமலை மீண்டும் அதிரடியாக தெரிவித்து இருந்தார், இதற்கு பாஜகவினர் மத்தியில் வரவேற்பு வந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அண்ணாமலைக்கு எதிராகவும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து இருந்தார், அதில்,
அரசியலில் கடுமையான கருத்து மோதல்கள் இருக்கலாம்.ஆனால் அது அநாகரிகமாக,கண்ணியக்குறைவாக இருக்கக்கூடாது. மிகச்சிறந்த அறிவாளியும்,நிர்வாகியுமான நிதியமைச்சர் Palanivel Thiaga Rajan அவர்களை எனது செருப்புக்கு சமமில்லை என்று சொல்வது அநாகரிகத்தின் உச்சம். அதிகார போதையின் வெளிப்பாடு.
இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவரிடமிருந்து இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம் வெளிப்படுவது வருத்தத்திற்குரியது. அரசியலில் நம்பிக்கையுள்ள இளைஞர்களைக் கூட. இதுபோன்ற அரசியல் கலாசாரம் வெறுப்படைய வைத்துவிடும் என ஜோதிமணி குறிப்பிட்டு இருக்கிறார்.
ஜோதிமணி பேசியது தான் மிச்சம் பலரும் கமெண்ட் பாக்ஸில் ஜோதிமணி கருத்தை கடுமையாக சாடி வருகின்றனர், எடப்பாடியை விட ஸ்டாலின் செருப்புக்கு விலை அதிகம்--ஆண்டிமுத்து ராசா. எட்டுக்கும் பத்துக்கும் இடையில் ஒரு நம்பர் இருக்குமே அது தான் அண்ணாமலை --சைதை சாதிக்.
அண்ணாமலை ஒரு பொருக்கி---அன்பரசன். இந்த வசனமெல்லாம் திமுக கைக்கூலிகள் பேசியது. அவர்கள் பேசும் போது நடுநிலைகளுக்கு வராத ரோஷம் அண்ணாமலை பேசும் போது மட்டும் வருவதேன் எதை விதைக்கின்றோமோ அதை தான் அறுவடை செய்ய வேண்டும் இது தான் உலக நியதி என நித்யா என்பவர் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் ஒருவர், ஆர் எஸ் பாரதி பேசியது மற்றும் ஒரு அமைச்சர் அரசு ஊழியரை ஆபாசமா திட்டியது இது போன்ற தருணங்களில் இப்படிப்பட்ட கருத்துக்களை தாங்கள் ஏன் சொல்லவில்லை,ஏன் நலத்திட்ட உதவிகள் செய்யவில்லை என்று கேட்டதற்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கேட்டதற்கு தேதி போட்டோமோ என்று கேட்டார்.
பரம்பரை பெருமைகளை பேசி அடுத்தவர்கள் மனதை நோகடிக்கும் நபராக தான் அவர் தற்போது பார்க்கப்படுகிறார், உலகிலேயே இவர் ஒருவர் தான் அறிவாளி போலவும் மற்றவர்கள் எல்லாம் அறிவு இல்லாதவர்கள் போலவும் இவர் சித்தரித்து பேசுகிறார் இது ஏற்புடையதா? எனவும் பலரும் பலவாறு ஜோதிமணிக்கு அடிக்கு அடி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஒருவர் ஒரு கருத்து தெரிவித்தால் அவரது கருத்திற்கு 10% ஆதரவாவது கிடைக்க வேண்டும், ஆனால் ஜோதிமணி கருத்திற்கு எதிர்ப்புக்களே நிறைந்து இருக்கின்றன, மொத்தத்தில் நிதி அமைச்சருக்கு ஆதரவாக வாயை கொடுத்து வாங்கி கட்டி கொண்டு இருக்கிறார் ஜோதிமணி.