24 special

காஸ்மீர் போன்று "மும்பையும் யூனியன் பிரதேசம்" என்ன நடக்கிறது சிவசேனா கதறல்..!

Modi and sivasena
Modi and sivasena

பாஜக கூட்டணியில் இடம்பெற்று பொது தேர்தலை சந்தித்த சிவசேனா தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியது, அன்று முதல் பாஜக மற்றும் சிவசேனா இடையே பல்வேறு மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன, இந்த சூழலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மும்பையை பிரிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக சிவசேனா தெரிவித்துள்ளது.


இது குறித்து அந்த கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் தெரிவித்த தகவல் பின்வருமாறு பா.ஜ.க-வின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிசும் அவரது குழுவினரும் சேர்ந்து மகாராஷ்டிராவிலிருந்து மும்பையைப் பிரிக்க முயற்சிக்கின்றனர். மும்பையை தனி யூனியன் பிரதேசமாக்க பா.ஜ.க முயல்கிறது.

இது தொடர்பான திட்டத்தை தேவேந்திர பட்நவிசும், அவரது ஆட்களும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளனர். குஜராத்தின் மோடி மாடலை பிரபலப்படுத்தவேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி சர்வதேச தலைவர்களையெல்லாம் குஜராத்திற்கு அழைத்து சென்றுகொண்டிருக்கிறார்.

மகாராஷ்டிராவும், மும்பையும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது கொடுக்கும் விழாவுக்கு முதல்வர் உத்தவ்தாக்கரேயை அழைக்காதது குறித்து விமர்சனம் செய்துள்ள சிவசேனா, லதா மங்கேஷ்கர் குடும்பம் முதல்வர் உத்தவ்தாக்கரேயை அவமானப்படுத்தி விட்டதாக குறிப்பிட்டிருக்கிறது.

ஏற்கெனவே சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவுத் மும்பையைப் பிரித்து தனி யூனியன் பிரதேசமாக மாற்ற பா.ஜ.க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், தற்போது சிவசேனா அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார மண்டலம் மும்பையாகும் நாட்டின் வளர்ச்சியில் மும்பையின் பங்கு பெரிய முக்கியத்துவம் பெறுகிறது.

மும்பை யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டால் அங்கு அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் என்பதால் சிவசேனா தற்போது தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறது.