24 special

பிரபல ஊடகத்தில் இருந்து செந்தில் வெளியேற்றம் உண்மை என்ன?

Senthil
Senthil

தனியார் ஊடகத்தில் பகுதி நேர நெறியாளராக பணியாற்றி வருபவர் செந்தில் என்ற செந்தில்வேல்,  இவர் தனியாக யூடுப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார், தனியார் ஊடகம் ஒன்றில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக எழுந்த விமர்சனங்களின் எதிரொலியாக நடைபெற்ற விவாதத்தில் செந்தில் அவதூறு கருத்துக்களை பரப்புவதாக குற்றசாட்டு எழுந்தது.


இதன் அடிப்படையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருந்தார் அதில்..30.3.2022 அன்று மாலை முரசு தொலைக்காட்சியில் முரசரங்கம் நிகழ்ச்சியில், நெறியாளர் செந்தில்வேல் என்பவர்,

நான் தமிழக முதல்வராக இருந்தபோது ,தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன்,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்ற போது , எனது மகனையும் உறவினர்களையும் அழைத்து சென்றதாகவும், கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்ய சென்றதாகவும் உண்மைக்கு மாறாக,

அபாண்டமாக வீண் பழி சுமத்தினார் எனது நற்பெயருக்கு களங்கத்தை விளைவித்த அந்த நெறியாளர், மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகத்தினர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த சூழலில் உடனடியாக செந்திலை தொடர்புகொண்ட தனியார் ஊடகம் நீங்கள் தெரிவித்த தகவலுக்கு ஆதாரம் அல்லது ஏதேனும் தகவல்கள் இருக்கிறதா என கேட்டு இருக்கின்றனர், இதற்கு செந்தில் எப்போதும் போல பேசினேன் என குறிப்பிட்டு இருக்கிறார், இதற்கு ஊடக நிர்வாகம் எப்போதும் போல பேச இது யூடுப் சேனல் இல்லை டேட்டா இல்லாமல் பேசுவது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சிக்கல்தான் என்று ஆவேசமாக கூறியுள்ளனர்.

இதையடுத்து செந்தில் சட்ட. ரீதியாக எதிர்கொள்வோம் அப்படி எதிர்கொண்டால் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும் எனவும் ஆலோசனை நடத்தினராம், விரைவில் சத்தமில்லாமல் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கலாம் என செந்தில் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது, அதே வேலையில் தொடர்ந்து செந்திலை முரசரங்கம் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கலாமா? இல்லை பணியில் இருந்து வெளியேற்றி விடலாமா என தனியார் ஊடகம் ஆலோசனையில் இறங்கியுள்ளதாம்.