பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் நேற்று ஒரே நாளில் தலைநகர் டெல்லியில் இருந்தனர், அண்ணாமலை மற்றும் முருகன் இருவரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்.இருவருடைய சந்திப்பு சாதாரணமாக கூறப்பட்டாலும் அது தான் நிர்மலா சீதாராமன் நேற்று ஆவேசமாக செய்தியாளர்களை சந்தித்து பேச முழு காரணமாக கூறப்படுகிறது, இதன் பின்னணி தற்போது தெரியவர தமிழக முதல்வர் ஸ்டாலின் தரப்பு கடுமையாக அதிர்ந்து இருக்கிறது.பாஜக முக்கிய நிர்வாகிகள் டெல்லி வருமாறும் வெள்ள நிலவரம் குறித்தும் சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் குறித்து அறிக்கையுடன் டெல்லி வருமாறு கட்சி தலைமையிடம் இருந்து உத்தரவு வந்தது இதை அடுத்து தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் டெல்லி பறந்தனர்.
அப்போது தமிழக கள நிலவரம் குறித்து அண்ணாமலை நிர்மலா சீத்ரமானிடம் எடுத்து கூறினார், இப்போதும் மத்திய அரசு மீது தான் திமுகவினர் குறை கூறுவதையும் மத்திய அரசு கொடுக்கும் பணத்தில் கூட திமுக கொடுப்பது போல் ஸ்டிக்கர் ஓட்டுவதையும் கூறி இருக்கிறார் அண்ணாமலை.இதை அனைத்தையும் கேட்ட நிர்மலா சீதாராமன் கடுமையாக கோபம் அடைந்து இருக்கிறார் தமிழக மக்கள் மீட்கப்பட வேண்டும் என நானே நேரடியாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பேசினேன் உடனே உதவிய செய்ய அனைத்து உத்தரவுகளையும் செய்தார்கள் ஆனால் மக்கள் விபத்தில் கூட அரசியல் செய்கிறார்கள் இதை விட கூடாது என முடிவு செய்த மத்திய நிதி அமைச்சர் உடனடியாக PIB க்கு தமிழகத்தில் உள்ள தமிழக ஊடகங்கள் அனைத்திற்கும் அழைப்பு கொடுக்கும் படி உத்தரவு போட்டார்.
அதன் அடிப்படையில் தான் நேற்றைய தினம் முழுக்க முழுக்க தமிழக ஊடகங்களை அழைத்து தமிழில் பிரஸ் மீட் வைத்து முதல்வர் ஸ்டாலின் முதல் உதயநிதி வரை கிழித்து தொங்கவிட்டார் நிர்மலா.இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது குறிப்பாக ஏற்கனவே பொன்முடி பதவி இழந்த முடிவில் இருந்து மீளாத திமுகவிற்கு ஏன் இப்போது பாஜக குறிப்பாக நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழ உடனே தங்கள் தொடர்புகள் மூலம் விசாரித்து இருக்கிறார்கள்.அங்குதான் பெரும் அடியாக திமுக தலைமைக்கு விஷயம் கிடைத்து இருக்கிறது இனி நேரடியாக தமிழக அரசியல் கள நிலவரத்தை கவனிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பிரதமர் மோடி உத்தரவு போட்டு இருப்பதாகவும் அவரும் அது குறித்து முதல் கட்ட ஆலோசனை நடத்த முடிவு எடுத்து இருப்பதால் தற்போது முக்கிய நிர்வாகிகளை மட்டும் அழைத்து இருக்கிறார்களாம்.அதன் படி தமிழக அரசியலை நேரடியாக கவனிக்க அமிட்ஷா நாள் குறித்து இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்து இருக்கிறது அவ்வளவுதான் அந்த செய்தி கிடைத்த மறு நொடியே முதல்வர் ஸ்டாலின் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறதாம்.