
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் அரசியல் கலவரங்கள், அந்நாட்டில் வாழும் சிறுபான்மை இந்துக்களின் வாழ்க்கையை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. வீடுகள் தாக்கப்படுதல், கோவில்கள் சேதப்படுத்தப்படுதல், நேரடி உயிர் மிரட்டல்கள் என நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையை உலகம் கவனிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் (UN) கவலை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய தரப்பும் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
வங்கதேசத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, குறிப்பாக இந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இது தற்செயலான வன்முறை அல்ல; திட்டமிட்ட அச்சுறுத்தலாகவே பலர் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், பிராந்திய சக்தியாகவும், மனித உரிமைகளை பேசும் தேசமாகவும் இருக்கும் இந்தியா தொடர்ந்து மௌனம் காக்குவது சரியானதா என்ற கேள்வி எழுகிறது.
வங்கதேசத்தில் பாதிக்கப்படும் இந்துக்களை சர்வதேச நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பாக மீட்டெடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் வங்கதேச குடிமக்களை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை தீவிரப்படுத்தியுள்ளது, இதில் சிறுபான்மையினர் ஓட்டிற்காக பாலஸ்தீனம் காசாவிற்கு குரல் கொடுத்தவர்கள் வங்கதேசத்தில் இந்துகளுக்கு எது நடந்தாலும் மௌனம் காக்கும் மம்தா பானர்ஜி, ஸ்டாலின் ராகுல் காந்தி போன்றோரின் செயல்பாடுகள் அந்த அந்த மாநிலங்களில் உள்ள இந்துக்களுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. வங்கதேச விவகாரம் இது தேசிய பாதுகாப்பும், மனிதாபிமானமும் தொடர்புடைய விஷயம்.
ரஷ்ய தூதர் கூறிய “1971-ல் பாகிஸ்தானை பிளந்து வங்கதேசம் உருவானதை மறக்கக் கூடாது” என்ற ஒரே வரி, வெளிப்படையாக வரலாற்றை நினைவூட்டுவது போலத் தோன்றினாலும், அதன் உள்ளார்ந்த அரசியல் அர்த்தம் மிகவும் ஆழமானது. இது போரைத் தூண்டும் மிரட்டல் அல்ல; ஆனால் சர்வதேச அரசியலில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு கூர்மையான “எச்சரிக்கைச் சைகை”. ரஷ்யா நேரடியாக மிரட்டும் மொழியை அரிதாகவே பயன்படுத்தும் நாடு. அதற்கு பதிலாக, கடந்த கால நிகழ்வுகளை நினைவூட்டி, தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தும் மறைமுக செய்தியை அனுப்புவது அதன் பாணி. இதே போல் தான் 1971-ஐ நினைவூட்டியுள்ளது , மனிதாபிமான காரணங்களுக்காக ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட்டு, வரலாற்றின் போக்கையே மாற்றிய சக்தியாக இந்தியா இருந்தது என்பதை உலகத்துக்கு மீண்டும் கூறியுள்ளது..
இந்த எச்சரிக்கையின் முதன்மை இலக்கு வங்கதேசமே. அங்கு சிறுபான்மை இந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்கள், அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி நடைபெறும் மனித உரிமை மீறல்கள், தென்னாசியாவின் நிலைத்தன்மைக்கு நேரடியாக ஆபத்தை உருவாக்குகின்றன. இத்தகைய சூழல் தொடர்ந்தால், “இது உள் விவகாரம்” என்ற கோட்டை இந்தியா கடக்க நேரிடலாம் என்பதையே ரஷ்யா சூசகமாகச் சொல்லுகிறது.
அதே நேரத்தில், இந்த வார்த்தைகள் இந்தியாவுக்கான ஒரு ஆதரவு சைகையும்கூட. இந்தியா மனிதாபிமான அடிப்படையில் அல்லது தூதரக ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால், அதை உலகம் தவறாக சித்தரிக்க முயன்றாலும், ரஷ்யா இந்தியாவின் பக்கம் நிற்கும் என்ற நம்பிக்கை இதில் அடங்கியுள்ளது.
ரஷ்ய தூதரின் அந்த ஒரே வரி வங்கதேசத்திற்கு ஒரு கடும் எச்சரிக்கையாகவும், இந்தியாவுக்கு ஒரு அரசியல் ஆதரவாகவும், உலக நாடுகளுக்கு ஒரு வரலாற்று நினைவூட்டலாகவும் செயல்படுகிறது. இது போர் அழைப்பு அல்ல. ஆனால் வங்கதேசத்தில் இந்துக்களின் உயிரும் உரிமையும் ஆபத்தில் இருக்கும்போது, இந்தியா அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை சர்வதேச மேடையில் தெளிவாகக் குறித்துக் காட்டும் அரசியல் சிக்னல்தான் அது.
