24 special

முதுகில் குத்தியது யார்? பாஜக என்ன செய்ய போகிறது?

Pm modi,  nitish kumar
Pm modi, nitish kumar

"அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்கிறது பாஜக. இப்படித்தான் பிஹாரில் JDU முதுகிலும், மஹாராஷ்டிராவில் சிவசேனா முதுகிலும், உ.பி-யில் பகுஜன் முதுகிலும் சவாரி செய்து பின்னர் அவர்களை கழற்றி விட்டது பாஜக. அதே போல, தமிழகத்திலும் அதிமுகவை கழற்றி விடும் பாஜக" என்று சில தமிழக 'தொலைக்காட்சி' அரசியல் ஞானிகள் சொல்கிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை?


1, உ.பி-யில் பாஜக முதுகில் குத்தியது பகுஜன். அதன் பின் இருவரும் கூட்டணி சேரவில்லை. பாஜகவை விட்டுச்சென்ற பகுஜன் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி. 2, சந்திரபாபு நாயுடு கதையும் இதே தான். 

3, பிஹாரில் JDUவும் பாஜகவும் தொகுதிகளை சமமாக பங்கிட்டு (50 - 50) அதில் போட்டியிட்டு வருகின்றனர் பல தேர்தல்களாக. பாஜக தொடர்ந்து உழைத்து தனக்கு கிடைத்த தொகுதிகளில் வெற்றியை குவிக்கிறது. நிதிஷ் குமாரின் மெத்தனப் போக்கால் JDU தொடர்ந்து சரிவை சந்தித்துவருகிறது. சென்ற தேர்தலில் JDUவை விட பாஜக அதிக இடங்களை வென்றாலும், தேர்தலில் 'நிதிஷ் குமார் தான் முதல்வர்' என அறிவித்தபடி, அவரை முதல்வராக்கியுள்ளது பாஜக. இன்று பாஜகவை விட்டு மீண்டும் லாலு - காங்கிரசுடன் கூட்டுச் சேரப் போகிறார் நிதிஷ் குமார். 

4, மஹாராஷ்டிராவிலும் பிஹார் போலத்தான் - 50 : 50 ஃபார்முலா. நிதிஷைப் போலவே உத்தவ் தாக்கரேயின் முட்டாள் தனத்தால் சிவசேனா குறைந்த தொகுதிகளை வென்றது. ஃபட்னவிஸை முதல்வராக அறிவித்து போட்டியிட்டாலும், தேர்தலுக்குப் பின் பாஜக முதுகில் குத்தி, எதிரிகளான தேசியவாத காங் - காங் உடன் கூட்டு சேர்ந்தார் உத்தவ். மிக மோசமான ஆட்சியை கொடுத்தார். பொறுமை இழந்த பலர், ஷிண்டே பின்னால் நின்று, உத்தவ் தாக்கரே தலைமையை நிராகரித்தனர். பாஜக முதுகில் குத்தியது உத்தவ் தாக்கரே தான். 

இதே போல ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணிக் கட்சிகள் பாஜக முதுகில் குத்திய கதை நிறைய உண்டு. பாஜக தனக்கு கிடைத்த தொகுதிகளில் 'வெற்றி பெறுவது எப்படி?' என்று செயல்படும் போது, கூட்டணிகள் 'நீ பெரியவனா, நான் பெரியவனா?' என்ற ஈகோ போட்டியில் கவனம் செலுத்துகிறார்கள். தோற்கிறார்கள்.

Credit - Selva nayagam