24 special

பிளான்-B பாஜக கையில் எடுத்த அதிரடி முடிவு பாஜக கணக்கு வெற்றிபெறுமா?

Amitshah, narendra modi
Amitshah, narendra modi

உலகில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்கள் வளர்ச்சியை முன்னிறுத்தியே காய்களை நகர்த்தும் அது தேசிய கட்சியானாலும் சரி மாநில கட்சியானாலும் சரி அந்த வகையில் மாநில கட்சியான திமுக பாஜக எதிர்ப்பு என்பதில் 2024 தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது , அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி பாஜகவுடன் செல்வதா வேண்டாமா என்ற விவாதத்தை கட்சிக்குள் கேட்டு கொண்டு இருக்கிறது.


அதிமுக பன்னீர் செல்வம் அணி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க கிறீன் சிக்னல் கொடுத்துள்ளது, இந்த சூழலில் டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி இனி பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து பயணிப்பது என்பது நிச்சயம் நடக்காது என உறுதியாக தெரிவித்து வந்துவிட்டார்.

இந்த சூழலில் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை தமிழகத்தில் எவ்வாறு சந்திப்பது என்பது குறித்து பாஜக தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது அதில் ஒரு கட்டமாக உத்திர பிரதேசம் பாணியில் தேர்தலை சந்திக்க அக்கட்சியின் தேசிய தலைமை ஆலோசனை செய்து வருகிறதாம்.

உத்திர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், மாயாவதி, காங்கிரஸ் என பாஜகவை எதிர்க்க கூடிய எதிர்க்கட்சிகள் தனியாக தேர்தலை சந்தித்தன பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் மூன்று பக்கமும் சிதறியதால் எளிதில் பாஜக வெற்றி பெற்றது மேலும் இடை நிலை சமூகங்களின் ஆதரவும் பாஜகவிற்கு கிடைத்தது.

இந்த சூழலில் அதே போன்று தமிழகத்தில் பாஜக தலைமையில் பன்னீர் செல்வம், சசிகலா, தேமுதிக புதிய தமிழகம், கொங்குநாடு இளைஞர் பேரவை  இன்னும் சிலருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் வரும் லாபம் என்ன நஷ்டம் என ஆராய்ந்து பாஜக முடிவு எடுக்க இருக்கிறதாம்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் ஜெயலலிதா ஆளுமையாக இருந்த காலத்தில் பாஜக கூட்டணி இரண்டு இடங்களை கைப்பற்றியது, மேலும் குறிப்பிட தகுந்த வாக்குகளை பெற்றது. இந்த நிலையில் அதே போன்று ஒரு கூட்டணியை அமைத்து திமுகவிற்கு எதிராக வியூகம் வகுக்க பாஜக முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஒன்றுபட்ட அதிமுக இருக்க வேண்டும் என பாஜக பல முறை எடுத்து கூறியும் அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்ட காரணத்தால் வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமி தரப்பை எதிர் முகமாக மாற்ற வேண்டிய சூழல் பாஜகவிற்கு உருவாகி இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொங்கு மண்டலத்தையும் அவரது உடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலரையும் நம்பி எடப்பாடி பழனிசாமி தனித்து நின்று தனது பலத்தை காட்ட முடிவு எடுத்து இருக்கிறாராம் இதில் இரட்டை இலை இருந்தால் மட்டுமே பாமக பழனிசாமியுடன் கூட்டணி சேரும் என்றும் இல்லை என்றால் பாமக பாஜக கூட்டணியில்தான் இடம்பெறும் எனவும் பார்க்கப்படுவதால் இப்போதே கொங்கு மண்டலத்தை தவிர்த்த அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்களாம்.

பாஜக கொடுத்த வாக்குறுதியை என்றுமே மீறியது இல்லை பீகாரில் நிதிஷ் குமாரை முதல்வராக முன்நிறுத்தினோம் அவரது கட்சியை காட்டிலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்ற போதிலும் நிதிஷ் குமாரை முதல்வராக அமர்த்தி இருக்கிறோம், எங்களுடன் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற கூட்டணி கட்சி சிவசேனா.

ஆனால் கூட்டணி தர்மத்திற்கு மாறாக காங்கிரஸ் உடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார் உத்தவ் தாக்கரே, ஆனால் இன்று என்ன நடந்தது கட்சியே அவரிடம் இல்லாமல் போனது தற்போது கூட மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் ஒருவரைதான் முதல்வராக தேர்வு செய்துள்ளோம், அதே போன்று ஒன்றுபட்ட அதிமுக இருந்தால் திமுகவை வீழ்த்த பயன்படும் என எடப்பாடி பழனிசாமியிடம் கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போதே பாஜக கூறியது ஆனால் அவர் மறுத்து விட்டார்.

எனவே எங்கள் வழியை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என தனி ரூட்டில் பயணிக்க தொடங்கியுள்ளதாம் பாஜக... ஊரக உள்ளாட்சி தேர்தலின் போதே தனித்து நின்று தனது பலத்தை நிரூபித்த பாஜக 2024 நாடாளுமன்ற பொது தேர்தலையும் அவ்வாறே அணுக முடிவு எடுத்து இருக்கிறதாம். கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட தமிழகத்தில் பாஜக வெல்லாத சூழலில் இந்தமுறை 1 இடம் கிடைத்தாலும் லாபம் எனவும் குறைந்தது 20 இடங்களில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய பாஜக முடிவு எடுத்து தேர்தலை சந்திக்க தயாராக முடிவு எடுத்து விட்டதாம்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கால் பதித்து ஆட்சியை பிடித்த பாஜகவால் தமிழகத்தில் தடம் பதிக்க முடியும் என அக்கட்சி தீர்க்கமாக முடிவு எடுத்து இருக்கிறதாம். பாஜகவிற்கு எதிரான வாக்குகள் திமுக கூட்டணி, எடப்பாடி பழனிசாமி கூட்டணி என இரண்டாக பிரியும் பட்சத்தில் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி வாய்ப்பை பெறலாம் என்று பாஜக தீர்க்கமாக முடிவு எடுத்து விட்டதாம்.