பிரபல தனியார் ஊடகம் தினமலர் வெளியிட்ட செய்தி தற்போது புயலை கிளப்பியுள்ளது, முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது, குறிப்பாக அரசு முறை பயணமாக துபாய் சென்ற ஸ்டாலின் அவரது ஒட்டு மொத்த குடும்பத்தையும் அழைத்து சென்றது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் விமர்சனம் செய்துள்ளார் அதாவது நான் வெளிநாடு சென்ற போது துறை சார்ந்த அமைச்சர், செயலாளர்களை அழைத்து சென்றேன் ஆனால் ஸ்டாலின் குடும்பத்தை அழைத்து கொண்டு சுற்றுலா சென்றுள்ளார் என விமர்சனம் செய்து இருக்கிறார்.
இது ஒருபுறம் என்றால் தற்போது மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது அதில் 50 லட்சம் கொடுத்து விளம்பரம் செய்யப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது இது குறித்து தினமலர் வெளியிட்ட செய்தி பின்வருமாறு :-
துபாய்: துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டடத்தில், இந்திய மதிப்பில் 50 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தினால், மூன்று நிமிடங்களுக்கு, அவர்கள் கொடுக்கும் காட்சிகளை, 'லேசர் ஷோ'வாக ஒளிபரப்பும் வசதி உள்ளது.இதுபோல கட்டணம் செலுத்தி, ஹிந்தி நடிகர் ஷாருக்கான், தன் பிறந்த நாளுக்கு லேசர் ஷோ ஒளிபரப்பச் செய்துள்ளார். நடிகர்கள் ரன்வீர் கபூர் - தீபிகா தம்பதி, துல்கர் சல்மான் ஆகியோர் பற்றிய லேசர் ஷோக்களும் ஒளிபரப்பாகி உள்ளன.இதே போல் கீழடி அகழாய்வு வீடியோ ஒளிபரப்பு துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடத்தில், தமிழகத்தின் கீழடி, பொருநை நாகரிகம் பற்றிய 'வீடியோ' காட்சிகள் நேற்று முன்தினம் ஒளிபரப்பப்பட்டன. இதை, ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'புர்ஜ் கலீபாவில் ஒளிபரப்பப்பட்ட, கீழடி, பொருநை நாகரிக காட்சிகளை, உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர். இந்திய வரலாற்றை தெற்கில் இருந்து எழுதுவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்தற்போது இதன்மூலம் 50 லட்சம் பணம் கொடுத்து ஒளிபரப்பு செய்யபட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் துபாய் பயணத்திற்கு பெரும் பணம் செலவிட பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கும் சூழலில் இதில் 50 லட்சம் வேறு விளம்பரம் செய்ய ஒளிபரப்பு செய்யபட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.