24 special

எப்பா என்ன ஒரு ரியாக்ஷன்.... சசிகலா கூட கவனிச்சிருக்க மாட்டாங்க போல!!! வைரலாகும் வீடியோ...! இவங்க யார் தெரியுமா...?

Sasikala
Sasikala

விளையாட்டு வீரர்கள் இருவர் போரிடும் களமும் இருநாட்டின் எல்லை பகுதியும் எப்படி ஒரு பரபரப்பான போர்களத்தை போல இருக்குமோ அதே போன்று தான் அரசியல் வட்டாரங்களும் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் பரபரப்பாக இருக்கும்! எந்த நேரத்தில் யார் எந்த அறிக்கையை வெளியிடுவார், யார் எந்த கூட்டணியில் சேர்வார், எந்த வழக்கில் சிக்குவார், செய்தியாளர்கள் சந்திப்பில் எந்த உண்மையை போட்டு உடைப்பார் என தெரியாது! அப்படி பல திருப்பங்களை தமிழக அரசியல் மட்டும் இன்றி ஒட்டுமொத்த உலக அரசியலை கண்டு வருகிறது. 


அதே சமயத்தில் இந்த அரசியல் களம் சில நேரங்களில் காமெடி களமாகவும் மாறிய தருணங்களும் நடந்துள்ளது. அதில் முதலாவது இடத்தை பிடித்திருப்பவர் அதிமுகவின் செல்லூர் ராஜு தான்!! ஏனென்றால் சூரியனின் ஆவியாதிலிருந்து வைகை ஆற்றை காப்பாற்றப் போகிறேன் என தர்மாகோல்லை வைகை நீரின் மீது போட்டு நூதனப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர். இதற்கு சமூக வலைதளம் முழுவதும் அரசியல் வட்டாரத்தின் மிகப்பெரிய மேதை அரசியல்வாதிகள் அனைவரும் நம் தமிழகத்தில் தான் இருக்கிறார்கள் என பல விமர்சனங்களும் மீம்ஸ்களும் பறந்தது. இவருக்கு அடுத்ததாக இருப்பவர் சென்னை மேயர் பிரியா, ஏனென்றால் இவர் மேயராக பதவியேற்ற சமயத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசும் பொழுது பல நேரங்களில் உளறி பலவற்றை தேவையில்லாமல் பேசி விடுவார். அந்த வீடியோக்கள் அனைத்துமே சமூக வலைதளங்களில் இன்றளவும் உலா வந்து கொண்ட தான் உள்ளது. 

இப்படி பரபரப்பான அரசியல் வட்டாரத்தில் கூட இந்த காமெடி எல்லாம் பண்ண முடியுமா என பலரும் சிந்திக்க வைக்கும் வகையில் பல அரசியல் பிரமுகர்கள் இதுபோன்று செய்து சிரிப்பலைகளில் சிக்கி உள்ளனர். அந்த வரிசையில் தற்போது சமூக வலைத்தளம் முழுவதும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு சின்னம்மா என்று அழைக்கப்படுகின்ற வி கே சசிகலா இடம்பெற்றுள்ளார். அதாவது இவர் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் உயிர் தோழியாகவும் மறைந்த எழுத்தாளரும் அரசியல்வாதியுமான நடராஜரின் மனைவியும் ஆவார். 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறிது காலம் அப்பதவியில் பொறுப்பு வகுத்து வந்தவர் சசிகலா. 

மேலும் இவர் புரட்சித்தாய் என்றும் சின்னம்மா என்றும் பரவலாக அழைக்கப்படுகிறார். இருப்பினும் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடி பொதுச் செயலாளர் பதவியில் இருந்த சசிகலாவை பதவியில் இருந்து தூக்கியது. அதுமட்டுமின்றி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் இணைந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக இவர் மீது குற்றச்சாட்டப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தடையைப் பெற்றார். ஆனால் மேல்முறையீடு செய்து விடுதலையானார். இருப்பினும் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் சசிகலாவை குற்றவாளி என தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வெளியில் உள்ள சசிகலா சமீபத்தில் அதிமுகவை ஒன்றிணைக்கும் வகையில் பத்திரியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். 

அப்படி இவர் பேசும் பொழுது இவருக்கு அருகிலேயே ஒரு பெண் நின்று சசிகலாவின் பேச்சிற்கு தனது முக பாவனைகள் மூலம் ரியாக்ஷன் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த வருடங்களில் சசிகலா பேசும் பொழுதும் அதே பெண் சசிகலாவின் அருகிலே இருந்து கொண்டு அதே ரியாக்ஷனை கொடுத்துள்ளார். இதனை போன வருடம் இந்த வருடம் என இரண்டு வருடத்திலும் எடுக்கப்பட்ட வீடியோவில் அந்த பெண்மணி கொடுக்கும் ரியாக்சனை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிடப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவர் யார் என விசாரித்தபோது அவர் சசிகலாவின் நேரடி உதவியாளர் எனவும் சசிகலாவுக்கு பணிவிடைகள் செய்ய அவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் வேறு சில தகவல்கள் கசிந்துள்ளன...