24 special

புல்டோசர் யோகி..! ஓகே சொன்ன உச்சநீதிமன்றம்.!

Yogi
Yogi

உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச மாநிலத்தில் பிஜேபி தலைமையிலான யோகியின் ஆட்சி பதவியேற்றபிறகு மாநிலத்தில் குற்றங்களும் ஆக்கிரமிப்புகளும் பெருமளவு குறைந்திருப்பதாக அரசின் ஆவணங்கள் தெரிவிக்கிறது. குற்றச்செயலில் ஈடுபடுவோர் தாமாக முன்வந்து காவல்துறையில் சரண்டராகும் சம்பவங்கள் இந்தியாவிலேயே உத்திரபிரதேச மாநிலத்தில் தான் நடைபெறுகிறது.


கற்பழிப்பில் ஈடுபட்டவர்கள்,கொலை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ,வன்முறையை தூண்டியவர்கள் , சமூக குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பில் ஈடுப்பட்டவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அரசியவாதியாக இருந்தாலும் அவர்களது சொத்துக்கள் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மாவட்ட நிர்வாகம் காவல்துறை உதவியுடன் புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளிவருகிறது.

இதன்காரணமாகவே குற்றவாளிகள் பயந்துபோய் சரணடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் நபிகளை பற்றி அவதூறு கருத்தை ஒருவர் கூறியதாக கான்பூர் மற்றும் ஷகரன்பூர் உள்ளிட்ட சில இடங்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் வன்முறை நிகழ்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.

இந்நிலையில் ஜாமியத் உலாமா ஐ ஹிந்த் எனும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. அந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் CU.சிங் " போதுமான கால அவகாசம் வழங்காமல் அவசரம் அவசரமாக புல்டோசர்கள் கொண்டு வீடுகள் இடிக்கப்படுகின்றன. 

இது அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுமல்லாமல் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. இடிக்க முற்படும் முன்னர் 15 நாட்கள் அவகாசம் அவசியமானது. சட்டவிரோத இடிப்புக்களை உடனடியாக நிறுத்த உத்தரவிடவேண்டும்" என வாதிட்டார். வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம் "  இடிப்புகள் சட்டத்தின்படியே நடக்கிறது. வைத்துள்ளது நீதிமன்றம்.

மாநில அரசை சட்டப்படி நடந்துகொள்ளுங்கள் என வேண்டுமானால் நாங்கள் அறிவுறுத்தலாம். ஆனால் இடிப்புக்களை நிறுத்த உத்தரவிட முடியாது. சட்டப்படியே அனைத்தும் நடைபெறுகிறது. ஆனால் அவை பழிவாங்கும் நடவடிக்கையாக தெரியவில்லை" என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் அடுத்த கட்ட விசாரணை விரைவில் நடைபெறும் எனவும் கூறியுள்ளது. 

ப்ரயாக்ராஜ் சஹாரன்பூர் மற்றும் கான்பூர் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை குறிவைத்து மாநில அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தொடரப்பட்ட வழக்கில் மனுதாரர்கள் தலையில் குட்டு  வைத்துள்ளது நீதிமன்றம். அதேபோல ப்ரயாக்ராஜ் கான்பூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பற்றிய விவரங்கள் அடங்கிய பிராமணபத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.