24 special

நோட்டிஸ் அனுப்பிய போலீஸ்..! பொங்கியெழுந்த முதல்வர் அலுவலகம்..!

Pinarayi Vijayan
Pinarayi Vijayan

கண்ணூர் :கேரள மாநிலம் கண்ணூர் காவல்துறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் அமைப்புக்கு சொந்தமான மசூதி ஒன்றில் வகுப்புவாத பிரச்சாரம் நடைபெறுவதை குறிப்பிட்டு நோட்டிஸ் அனுப்பியிருந்தது. இதற்க்கு வகுப்புரீதியாக பிளவுபடுத்த முயற்சிக்க வேண்டாம் என முதல்வர் அலுவலகம் மாநில காவல்துறையை கடிந்துகொண்டுள்ளது.


மயில் காவல் நிலைய எஸ்.ஹெச்.ஓ கண்ணூரில் இயங்கிவரும் ஜும்மா மசூதிக்கு ஒரு நோட்டிஸ் அனுப்பியிருந்தார். அதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகையின் பொது வகுப்புவாத பிரசங்கங்கள் நடைபெறுவதாகவும் அது இனரீதியான மோதலை ஏற்படுத்தும் எனவும் அதை தவிர்க்குமாறும் குறிப்பிட்டு நோட்டிஸ் அனுப்பியிருந்தார்.

இதற்க்கு பதிலளிக்கும் வகையிலும் காவல்துறையை கண்டிக்கும் வகையிலும் முதல்வர் அலுவலகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மாநிலத்தில் உள்ள மசூதிகளில் வகுப்புவாத பிரச்சாரம் நடைபெறுகிறது என்பதை அரசு நம்பவில்லை. வகுப்புரீதியான பிளவு படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

மயில் காவல் நிலைய எஸ்.ஹெச்.ஓ அனுப்பியுள்ள நோட்டிஸ் தேவையற்றது. இது எல்.டி.எப் அரசாங்கத்தின் பார்வைக்கு எதிராக உள்ளது. அரசின் கொள்கை என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் அனுப்பப்பட்டிருக்கும் இந்த அறிக்கை முற்றிலும் தேவையற்றது. மாநில அரசுக்கெதிராக திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

மாநிலத்தில் இனவாத பதட்டத்தை உருவாக்க சில ஆதிக்க சக்திகள் முயற்சி செய்துவரும் இந்நேரத்தில் நட்பையும் நல்லிணக்கத்தையும் பேணிக்காப்பது அவசியம். பல்வேறு மாதவழிபாட்டு தலங்கள் இருக்கும் மாநிலத்தில் மக்கள் அமைதியாகவே இருக்கின்றனர். அமைதியை குலைக்க யார் முயற்சித்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்" என முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.