ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவில் நான்கு சீட்டுகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் ரன்தீப் சுர்ஜிவாலா , முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி மற்றும் கன்ஷ்யாம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த ராஜ்ஜியசபா தேர்தலில் ஜீ டிவி நிறுவனரான சுபாஷ் சந்திரா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
சுபாஷ் சந்திராவுக்கு பிஜேபி மற்றும் ஆர்.எல்.பி கட்சிகள் ஆதரவளித்துள்ளன. நேற்று உதய்பூரில் பேசிய ராஜ்யசபா வேட்பாளரும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜிவாலா சுபாஷ் சந்திராவை தாக்கி பேசினார். அவர் பேசுகையில் மஹாபாரதத்தில் சீதா தேவி என குறிப்பிட்டார். மேலும் "பெரும்பான்மை வெல்லும். ஜனநாயகம் வெல்லும்.
ஒருகாலத்தில் சீதாதேவிக்கு சீர்காரணம் நடந்தது போல ஜனநாயகத்தை சீர்காரணம் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். பணபலம் சிபிஐ பலம் அமலாக்கத்துறை உதவி மற்றும் வருமானவரித்துறை ஆசியின் அடிப்படையில் ராஜஸ்தானுக்கு வந்தவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்" என சுபாஷ் சந்திராவை தாக்கிப்பேசியதோடு ஹிந்துக்களின் இதிகாசத்தையும் தவறாக கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிஜேபி தேசிய செய்தி தொடர்பாளர் ராஜ்யவர்தன் ரத்தோர் " காங்கிரஸ் ஏன் இந்துக்களை இவ்வளவு வெறுக்கிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் கோவில் கோவிலாக சுற்றும் ராகுல் ஹிந்துத்துவா போன்ற வார்த்தைகளால் எரிச்சலடைந்துள்ளார். அவர் சார்ந்திருக்கும் கட்சி எப்போதுமே ராமரை அவமதித்து வருகிறது.
சீதா மாதாவை பற்றி இன்று மீண்டும் அவதூறான கருத்துக்களை கூறி ஒட்டுமொத்த ஹிந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தியுள்ளது. சுபாஷ் சந்திராவை பற்றி பேசுவதற்கு முன்னால் காங்கிரசை ஒருமுறை திரும்பி பார்க்கவேண்டும்" என ரத்தோர் பதிலடி கொடுத்துள்ளார்.