24 special

பிஜேபி தலைவர்கள் வேட்டை நாய்களா...?? சர்ச்சையை கிளப்பிய முன்னாள் முதல்வர்..!

Bjp
Bjp

கர்நாடகா : பிஜேபி தலைவர்கள் அல்லது தொண்டர்கள் கூறும் சிறிய கருத்தும் கூட ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டு பூதாகரமான பிரச்சினையாக உருவெடுக்கவைக்கப்படும். அதுவே இடதுசாரிகளோ அல்லது காங்கிரஸோ கடுமையான கருத்துக்களை கூறினாலும் அது காதுகளுக்கு எட்டாமலேயே போய்விடும். 


கடந்தசில மாதங்களுக்கு முன்னர் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ஒரு கமிஷன் மண்டி எனவும் காங்கிரஸாரிடமே கமிஷன் வாங்குகிறார் எனவும் பொதுமேடையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இரண்டு எம்பிக்கள் பேசியிருந்தனர். அந்த சர்ச்சை அடுத்தநாளே மறைக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் முதலைவரான சித்தராமையா மைசூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிஜேபியினரை தரக்குறைவாக பேசியுள்ளார்.

புதன்கிழமை அன்று மைசூரில் நடையற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சித்தராமையா " நான் தனியாக பேசுகையில் பிஜேபியை சேர்ந்த 25 பேர் எனக்கு எதிராக வேட்டைநாய்கள் போல குரைக்கிறார்கள். ஆனால் அவர்கள் குரைக்கும்போது நான்மட்டுமே பேசவேண்டும். எங்கள் கட்சியை சேர்ந்த வேறு எவரும் பேசமாட்டார்கள். 

பாடப்புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ் காரரான ரோஹித் திருத்தியுள்ளார். அதை மாநில அரசு உடனடியாக பரிசீலித்து நீக்கும் என நம்புகிறேன். இல்லையெனில் காங்கிரஸ் வீதிகளில் இறங்கி போராடும்" என கூறினார். கர்நாடக மாநில பாடத்திட்டங்கள் கவிமயமாக மாற்றப்படுவதாக கூறி விதான் சௌதாவில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் சித்தராமையா பிஜேபியினரை வீட்டைநாய்களுடன் ஒப்பிட்டு பேசியது தற்போது கர்நாடக அரசியலில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. மேலும் பிஜேபியினர் சித்தராமையா மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறிவருகின்றனர். மேலும் அரசியல் விமர்சகர்கள் சித்தராமைய்யாவின் பேச்சுக்கு கடும்கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.