சோழர்கள் எந்த அளவிற்கு கட்டிடக்கலையில் சிறந்து விளங்கினார்களோ அதே அளவிற்கு பாண்டியர்களும் கட்டிடக்கலைகளில் திறமையானவர்களாக இருந்து வந்தனர். சோழர்களின் கட்டிட கலைக்கு சான்றாக இன்றளவும் மிகவும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் தஞ்சை பெரிய கோவிலை அனைவரும் கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து பாண்டிய மன்னர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலினை கூறுகின்றனர். என்னதான் இந்த இரண்டு மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் கட்டிடக்கலையில் சிறந்து விளங்கி இருந்தாலும் கூட அவர்கள் இருவரும் கட்டிய கோவில்களின் கட்டிடக்கலையை வைத்து பார்க்கும் பொழுதே கோவிலினை எந்த மன்னன் கட்டியிருப்பான் என்று கூறும் அளவிற்கு அவர்கள் ஒவ்வொருவரின் கட்டிடக்கலை ஆனது தனித்துவம் மிக்கதாக இருக்கும்.
உதாரணமாக சோழர்கள் கட்டிய தஞ்சை பெரிய கோவிலின்னை எடுத்துக்கொண்டால் இறைவனின் கருவறை அமர்ந்திருக்கும் கர்ப்ப கிரகத்தினை மிகவும் உயர்ந்ததாகவும், சுற்றி இருக்கக்கூடிய மதில் சுவராக இருந்தாலும் சரி கோபுரங்களாக இருந்தாலும் சரி அவை கர்ப்ப கிரகத்தின் அளவைவிட மிகவும் குறைந்ததாகவே கட்டுவார்கள். எனவே தஞ்சாவூர் கோவிலிலும் இதுபோன்றுதான் சிவன் இருக்கும் இடம் மட்டுமே மிகவும் உயரமான கோபுரங்களை கொண்டுள்ளதாகவும் மற்றபடி அனைத்து கோபுரங்களும் உயரம் குறைவாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். இதே போல தான் சோழர் கங்கைகொண்ட சோழபுரம், தாராபுரத்தில் அமைந்துள்ள கோவிலும் இதேபோன்றுதான் கர்ப்ப கிரகத்தில் உள்ள கோபுரம் மட்டும் மிகவும் உயரமானதாகவும் சுற்றி இருக்கும் பகுதிகள் மிகவும் தாழ்வானதாகவும் இருக்கும்.
இது போல தான் பாண்டிய மன்னர்களின் கட்டிடக்கலையும் மிகவும் வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. பாண்டிய மன்னர்களின் கட்டிடக்கலையானது அப்படியே சோழ மன்னர்களின் கட்டிட கலைக்கு எதிரானதாக இருக்கிறது. ஏனென்றால் நுழைவாயிலில் அமைந்திருக்கும் கோபுரங்கள் மிகவும் உயரமானதாகவும், கர்ப்பகிரகத்தில் உள்ள சுவாமி அமைந்திருக்கும் இடத்தின் கோபுரமானது உயரம் தாழ்ந்தவையாகவும் இருக்கும். இதற்கு உதாரணமாக மதுரையின் மீனாட்சி அம்மன் கோவிலை பார்த்தாலே தெரியும். மேலும் திருச்சி நெல்லையப்பர் கோவில், தென்காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதன் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் போன்ற விசேஷம் வாய்ந்த கோவில்கள் கூட இதே போல தான் பாண்டியர்கள் கட்டியுள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் சோழர்கள் கட்டிய கோவிலாக திகழ்ந்து வருகிறது. இருப்பினும் கூட கோவிலின் கிழக்கு வாசலில் சுந்தர பாண்டியன் கட்டப்பட்டிருக்கும். இதனை பார்க்கும் பொழுது எல்லா மன்னர்களுக்கும் அந்த காலத்திலேயே ஒற்றுமை இருந்து வந்தது என்பது தெரிய வருகிறது. இவ்வாறு பல அதிசயங்கள் நிறைந்த கோயில்களை பாண்டிய மன்னர்கள் கட்டியுள்ளனர். இந்த நிலையில் தற்பொழுது பாண்டிய மன்னன் கட்டிய பழமையான கோவில் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கிளாதரி என்ற ஊரில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோவில் ஒன்று கேட்பதற்கு யாரும் இல்லாத நிலையில் இருக்கிறது. மிகவும் அபூர்வ வாய்ந்த இந்த கோவில் தற்போது யாரும் பார்க்காத நிலையில் கவனிப்பாரின்றி இருக்கிறது, அந்த காலகட்டத்தில் பெரிய அளவில் பூஜைகள் செய்யப்பட்டு வந்த மூலவரின் தற்போதைய நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. இவ்வாறு பழமை வாய்ந்த மன்னர்களால் கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த கோவில்கள் யாருக்கும் தெரியாத நிலையில் இருந்து வருகிறது. இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி பாண்டிய மன்னர்கள் இதுபோன்ற கோவில்களையும் கட்டியுள்ளனரா?? என்றும் விரைவில் இந்த கோவிலின் சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.