√ ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் அதிமுக பொதுக்குழுவை கூட்ட முடியாது..
√ தற்காலிக அவைத்தலைவரால் பொதுக்குழுவை கூட்ட முடியாது..
√ ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்டுவதில் சிக்கல் வந்தால்,ஒரு ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை அணுகலாம்..
ஆக நடத்திய இரண்டு பொதுக்குழுவுமே செல்லாது,ஜூன் 23 க்கு முன்னர் உள்ள நிர்வாக அளவுகோலே மேற்கொண்டும் தொடரும்..இப்போது ஒருங்கிணைப்பாளரின் அதிகாரம் செல்லும் என்று, அதிமுகவின் அதிகாரப் பிடியை மீண்டும் ஓபிஎஸ் கைக்கு கொடுக்கிறது நீதிமன்றம்.
பொதுக்குழுவின் முடிவுகளில்,ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.ஆனால் அதன் தேர்வுமுறைகளில் தவறு இருந்தால்,பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகினால் அதில் நீதிமன்றம் தலையிட முடியுமென நீதிபதி தெளிவாக சொல்லியுள்ளார்..
இந்த தீர்ப்பில் நிறுவப்பட்ட விஷயங்கள்..ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர்,தமிழ்மகன் உசைன் தற்காலிக அவைத்தலைவர் மட்டுமே,எனவே இவர் தலைமையில் கூட்டிய பொதுக்குழு செல்லாது இனியும் கூட்ட முடியாது.பொதுக்குழு செல்லாது என்கிற போது கழக இடைக்கால பொதுசெயலாளர் தொடங்கி,நீக்கப்பட்ட உறுப்பினர்கள் முதல் மாற்றப்பட்ட கழக விதிகள் வரை எதுவுமே செல்லாது..
இப்போது ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை கூட்டமுடியாது.பொதுக்குழுவுக்கான அஜென்டாவை ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் சரிபார்த்து ஏற்றுக் கொண்டுதான் பொதுக்குழுவிற்கு அழைப்புவிடுக்க முடியும்.ஓபிஎஸ் - இபிஎஸ்ஸால் தனித்தனியாக பொதுக்குழுவை கூட்ட முடியாது.
அதிமுகவின் சட்டவிதிகளை மாற்ற வேண்டும் அல்லது ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பு என்றால்? ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக இணைந்து பொதுக்குழுவை கூட்டி விவாதிக்கலாம்.
ஆனால் பொதுக்குழுவால் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளரை நீக்கவெல்லாம் முடியாது.அதே போல தன்னிச்சையாக கழக சட்டவிதிகளை பொதுக்குழுவுக்கு மாற்றும் அதிகாரமும் கிடையாது.தற்காலிக அவைத் தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லாதபோது,அதிமுகவின் அதிகாரம் ஓபிஎஸ் - இபிஎஸ் என்ற இருவரின் கைகளில் மட்டுமேதான் முழுமையாக உள்ளது.
இதில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருக்கும் ஏதேனும் நிலையின்மை இருந்தால் அதற்கான நியாயமான காரணத்துடன் நீதிமன்றத்தை அணுகி ஒரு ஆணையரை நியமிக்க வைத்து வேண்டுமானால் பொதுக்குழுவை நடத்தலாம்.
ஆணையர் தேவையில்லை என்று கருத முடியாது.காரணம்,ஓபிஎஸ் - இபிஎஸ் அனுமதி இல்லாமல் கூட்டத்தை கூட்ட முடியாது.இதில் ஒருவர் மறுத்தாலோ,தனக்கு திருப்தி இல்லை என்று சொன்னாலோ? நீதிமன்ற வழிகாட்டுதலில்தான் நடத்த முடியும்.
எனவே,மேல்முறையீடு செய்து இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்கவோ,இதை செயலிழக்கவோ செய்ய முடியவில்லை என்றால் பொதுக்குழுவை கூட்டுவதெல்லாம் சாதாரண வேலையல்ல.
credit - சுந்தர்ராஜசோழன்