தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 12 நாட்களுக்குப் பிறகு தமிழகம் திரும்பியுள்ளார், அமெரிக்காவில் கல்வி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் இன்று சென்னை விமான நிலையம் திரும்பினார், விமான நிலையத்தில் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
இது ஒருபுறம் என்றால் தற்போது அண்ணாமலை திமுக முக்கியமாக கையிலெடுத்த ஒரு விவகாரத்தை ஒரே பேட்டியில் ஆப் செய்துள்ளார், திமுக தலைவர் ஸ்டாலின் கடந்து பொதுக்குழு கூட்டத்தில் மிக முக்கியமாக அமைச்சர்கள் செயல்பாடுகளை வைத்து தனக்கு தூக்கம் வரவில்லை என கூறியிருந்தார்.
இது சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சிகள் பாஜக, அதிமுக, புதிய தமிழகம் இன்னும் பிற அரசியல் கட்சிகளால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது, மேலும் பல்வேறு ஊடகங்களில் முதல்வரின் கருத்தை மையமாகக் கொண்டே விவாதங்கள் அமைந்தன.
இது திமுகவில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் முதல்வரின் சொல்லுக்கு கட்டுப்படவில்லை என்ற ஒரு விவாதப் பொருளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது, இதே விவாதங்கள் நடந்து கொண்டிருந்தால் முதல்வரை கட்சிக்காரர்களே மதிப்பதில்லை என்ற ஒரு பிம்பம் உருவாகும் என பல்வேறு முக்கிய பத்திரிகையாளர்களும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து திமுக பொதுக்குழுவில் முதல்வர் பேசியதை விவாதப் பொருளாக இருப்பதை மாற்ற திமுகவிற்கு சில ஐடியாக்கள் கொடுக்கப்பட்டதாம், தற்போது ராஜராஜசோழன் இந்து என்ற விவாதம் பொருள் மையமாக கொண்டு அதை மடை மாற்றி விடலாம் என்றால் இப்போது ராஜராஜசோழன் இந்து இல்லை என்று சொன்ன வெற்றிமாறனுக்கு எதிராகவே பல்வேறு கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் இந்து அல்லது சங்பரிவார் அமைப்புகள் மீது சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்றெல்லாம் கிளம்பினால் அது நிச்சயம் பாஜகவிற்கு தான் வலுவாக அடித்தளமாக அமையும் எனவும் கூறப்பட்டிருக்கிறது . சிபிஐ கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் இந்துவா சைவமா வைணவமா என நாம் இப்போது பேசவே தேவையில்லை அது பாஜகவிற்கு தான் அடித்தளமாக மாறும் என நேரடியாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையடுத்து திடீரென இந்தி மொழியை வைத்து அரசியல் செய்யலாம் அல்லது அதற்கு எதிராக மாவட்டங்கள் தோறும் போராட்டம் நடத்தினால் மக்களின் கவனத்தை பெறலாம் எனவும் ஊடகங்கள் மூலம் அதை விவாதப் பொருளாக மாற்றி இந்தியை திணிக்க மத்திய அரசு மத்தியில் ஆளும் பாஜக அரசு என்று கொண்டு சென்றால் இந்திய தீர்ப்புக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் ஒருங்கிணையும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
மாநிலத்தில் ஆட்சி செய்யும் திமுக வேறு எந்த விவகாரத்தை வைத்து போராட்டம் நடத்தினாலும் அது வேறு வடிவத்தில் பாஜகவிற்கே நன்மை பயக்கும் என்றும் இந்தி மொழியை வைத்து அரசியல் செய்தால் தமிழ் VS ஹிந்தி என்ற மாறுவதால் பாஜகவிற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் வாய்ப்பாக எனவும் ஆலோசனை வழங்கப் பட்டு இருந்ததாம்.
திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி தலைமையில் மாவட்ட தலைநகரங்களில் இந்தி திணிப்பு என கூறி போராட்டம் நடத்த திமுக தயாராகி தேதியும் அறிவித்து இருந்தது இந்த சூழலில் தான் இன்று சென்னை திரும்பிய அண்ணாமலை முதல் பேட்டியில் திமுகவின் குற்றசாட்டை ஒரே அடியாக நொறுக்கிவிட்டார்.
இந்தி திணிப்பு எல்லாம் இல்லை அதை திணித்தது காங்கிரஸ்,இந்தியை காரணம் காட்டியே காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது திமுக... ஆனால் அதன் பிறகு காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து இருந்தது இதெல்லாம் தெரியாதா? இந்தி மொழி குறித்து தெளிவான விளக்கத்தை கொடுத்தவர் மோடி அவர்தலைமையில் 2020-ல் இந்தி மொழி குறித்து உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட்டது.
மாநில மொழி மற்றும் ஆங்கிலம் இரண்டுடன் வேறு ஏதாவது மூன்றாவது மொழியை கற்காலம் என கொண்டுவந்தவர் மோடி என அதிரடி விளக்கம் கொடுத்தார்.
முதல்வர் முதலில் கட்சி காரர்களை பார்த்து பயப்படுகிறார் இப்போது பாஜகவின் வளர்ச்சியை பார்த்து பயம் கொள்வதாக கூறி, திமுகவின் இந்தி எதிர்ப்பு கணக்கை கன கச்சிதமாக தமிழகம் திரும்பிய முதல் நாளே முடித்துவிட்டார் அண்ணாமலை.