24 special

அடுத்தடுத்து வெளியாகும் சர்வே ரிப்போர்ட்! அறிவாலயலத்தில் இடியை இறக்கிய உளவுத்துறை! உள்ளே வந்த பாஜக

PMMODI,MKSTALIN
PMMODI,MKSTALIN

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களின் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டார்கள். திமுக ஓரணியில் தமிழ்நாடு என உறுப்பினர் சேர்க்கையில் இறங்கினார்கள் அனால் மக்கள் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை ஈசன் திமுகவினரே ஆர்வம் காட்டவில்லை. இது குறித்து உளவுத்துறை ரிப்போர்ட் அறிவாலயத்தில் ரிப்போர்ட் ஒன்றை கொடுத்துள்ளது  அதில் திமுகவினரே திமுகவுக்கு எதிராக உள்ளதுதான் ஷாக் ரிப்போர்ட். 


 மக்களிடையில் எடுக்கபடும் சர்வே ரிப்போர்ட்டுகளும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணி கடந்த 2021 தேர்தலில்பெற்ற 45% வாக்குகளில் குறைந்தது15% முதல் 20%  வாக்குகளை உறுதியாக இழக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தான்  2026 ல் திமுக எத்தனை வித்தைகளை காட்டினாலும் வெற்றி பெற முடியாது. என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக  பாஜக  கூட்டணி வெற்றி பெற்று தமிழக வரலாற்றில் புது ஆட்சி அமைக்கும் என தமிழக உளவுத்துறை கூறியுள்ளது. மேலும் விஜயின் தாக்கம் திமுகவுக்கு எதிராக மாறியுள்ளது. இதுவரை அதிமுக பாஜக கூட்டணியை விஜய் பாதிக்கும் என்ற ரீதியில் தான் இருந்துள்ளது. திமுக எதிராக உள்ள வாக்குகளை விஜய் பிரிப்பர் என திமுக நினைத்திருந்தது. ஆனால்  கரூர் சம்பவத்துக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இரு கட்சிகளும் வேண்டாம் என்ற முடிவை மக்கள் எடுத்துளார்கள். மேலும் மோடியின் எதிர்ப்பு அலை என்பது முற்றிலும் குறைந்து ஆதரவு அலை ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து தான்  தமிழக முதல்வரின் ரோடு ஷோ உங்களுடன் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு  துவங்க காரணமாம். திமுக அரசு தமிழக மக்களுக்கு உண்மையில், நல்லாட்சி கொடுத்திருந்தால், தேர்தலுக்கு இன்னும் 6  மாதங்கள் உள்ள நிலையில் எதற்கு வீடு வீடாகப் போய் வாக்கு சேகரிக்க வேண்டும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் கோபாலபுரம் தரப்பில் பல விசயங்கள் வெளியாகி வருகிறது. இந்த தேர்தலோடு முதல்வர் ஸ்டாலின் ஓய்வு பெறும் எண்ணத்தில் உள்ளதாகவும்  அடுத்த முதல்வர் உதயநிதி தான் என உதயநிதி ஆதரவாளர்களிடையே கொளுத்தி போடப்பட்டுள்ளதாம். இதனால் கோபாலபுரத்தில் பெரிய பிரளயமே வெடித்துள்ளதாம், கனிமொழி தமிழகத்திற்குல் என்ட்ரி ஆவதற்குள் இந்த வேலையை முடித்து விட வேண்டும் என உதயநிதி தரப்பு முடிவெடுத்துள்ளதாம். 


திமுகவின் மீது மக்கள் கடுப்பில் தான் உள்ளார்கள் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் படுதோல்வியை சந்தித்துள்ளாதாம் சொத்து வரி உயர்வு, மின்சாரக்கட்டண உயர்வு சட்டம் ஒழுங்கு, அத்தியவசிய பொருட்கள் உயர்வு, கஞ்சா புழக்கம், என மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான அலை வீசுவதால் திமுகவில் உள்ளவர்களே திமுகவுக்கு எதிராக திரும்பியுள்ளார்களாம். 


இதனிடையே பாஜக ஒரு வியூகத்தை கையில் எடுத்துள்ளதாம். பாஜக கூட்டணி பீஹாரில் கடந்த சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிபடி, ஆட்சிக்கு வந்ததும் மதுக் கடைகளை மூடினார்கள்,.மதுக்கடைகளை மூடியதால் பீஹாரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடவில்லை. குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் இறந்து போய்விடவில்லை. மாறாக பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேநேரம், தமிழகத்தில் தெருவிற்கு தெரு டாஸ்மாக் கடைகள் இருந்தும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, நுாற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தனர். எனவே பீகாரை குஜராத்தை போல் எங்கள் ஆட்சி அமைந்தால் மதுவிலக்கு என பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. இந்தமுறை மாறாது பாஜக உள்ளே வந்தே தீரும் என கூறுகிறார்கள்!