24 special

செந்தில் பாலாஜி வழக்கு திடீர் ட்விஸ்ட்..டெல்லிக்கு மாற்றப்படுகிறதா! மொத்தமாக மாறிய களம்! ரெடியான திகார்

SENTHILBALAJI,COURT
SENTHILBALAJI,COURT

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு செம்ப்டம்பர் மாதம் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மந்திரியாக செயல்பட்டவர் செந்தில் பாலாஜி.  கடந்த 2023 ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜி வீடு, தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்குப்பின் அன்று இரவே சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.


இதையடுத்து, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்ட சில நாட்களில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.

அதேவேளை, செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்ற நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அமைச்சர் பதவி அல்லது ஜாமீன் இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யுமாறு செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தது. இதையடுத்து, அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், பணமோசடி தொடர்பான வழக்கில் கோர்ட்டு தீர்ப்பில் உள்ள கடுமையான  சில கருத்துகளை நீக்கி உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணையில் இருக்கும்போது குற்றஞ்சாட்டப்பட்டவர் அமைச்சராக நீடிக்கக்கூடாது என கூற முடியாது என வாதிட்டார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவர் அமைச்சராக இருந்ததால் சாட்சியங்களை கலைக்க நேரிடும். அவர் அமைச்சராக இல்லாததை கருத்தில் கொண்டே ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் அமைச்சராவதை கோர்ட்டு தடுக்கவில்லை. 

கோர்ட்டு அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம். ஆனால், அமைச்சராகும்போது சாட்சியங்களை கலைக்க முயற்சிப்பதாக புகார் வந்தால் , ஜாமீன் விதிமுறைகளை மீறினால் செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவே மீண்டும் அமைச்சரானால் கண்டிப்பாக ஜாமீனும் ரத்து செய்யப்படும் என்பதை கூறியுள்ளது நீதிமன்றம். 

அத்துடன், விசாரணையின் போது, செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை டெல்லிக்கு ஏன் மாற்றக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் மேலும்,  நீதிபதி இவ்விவகாரங்களில் நாள்தோறும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் எழுதுகிறது. எனவே வழக்கை வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்து நாள்தோறும் விசாரணை மேற்கொண்டால் சரியாக இருக்கும் என உத்தரவிடலாமா? என கேள்வி எழுப்பினர்.

ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அவ்வாறு வழக்கை வேறு மாநிலத்திற்கு அல்லது டெல்லிக்கு மாற்றினால் இந்த வழக்கில் பல்வேறு சாயங்கள் பூசப்படும். எனவே வழக்கை தமிழகத்தில் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால், மனுதாரர்கள் ஒய்.பாலாஜி மற்றும் வித்யா குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சாட்சிகள் டெல்லி வருவதற்கு சிரமம் ஏற்படும் என்றால் வழக்கை டெல்லிக்கு மாற்றாமல் தமிழகத்திற்கு அருகில் இருக்கக்கூடிய பெங்களூருக்கு மாற்றலாமே என வாதம் முன் வைத்தனர். எனவே விரைவில் வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட உள்ளதாக டெல்லி தகவல் கூறுகிறது. அப்படி மாற்றினால் தேர்தல் நெருங்கும் நேரத்தில்  திகாரில் தான் செந்தில் பாலாஜி இருப்பர் என கூறுகிறார்கள்.