24 special

சி.பி.ஐயிடம் சிக்கிய ஆதாரங்கள்...சிக்கப்போவது யார்?...எத்தனை ஆயிரம் கோடி? அச்சத்தில் ஆளும்தரப்பு..

MKSTALIN,CBI
MKSTALIN,CBI

திமுக அரசில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை தான் உருவாகியுள்ளது. ஒருபக்கம் சட்டம் ஒழுங்கு சரியில்லை, மறுபக்கம் அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை மறுபக்கம் நலத்திட்ட உதவி பெயரில் அதில் ஊழல், பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலையி தமிழகத்தில் உருவாகி உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள் அவர்கள் கூறுவது போல் தான் தற்போது மிகப்பெரியஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது கிராமங்கள் தோறும் புயலை கிளப்பியுள்ளது. கிராமம் தோறும் நடக்கும் முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளது மத்திய அரசு. இது ஆளும் திமுக தரப்புக்குபெரும்  அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 


கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டம் செயல்பட்டு வருகிறது இந்த திட்டத்தில்  வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் செய்யும் முறைகேடுகள்  அதிகமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.  இது குறித்து  தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது மத்திய அரசு.இதற்கிடையே  கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி வரையிலான நிலவரப்படி முறையற்ற, போலியான வேலை அட்டை, பயனாளிகளின் இறப்பு போன்ற காரணங்களால் நாடு முழுவதும் 23 லட்சத்து 64 ஆயிரத்து 27 வேலை அட்டைகள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் 6 லட்சத்து 19 ஆயிரத்து 310 100 நாள் வேலை அட்டைகள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் போலி அட்டைகள் ஆகும்.

கிராமப்புறங்களில் சாலைகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட பொது சொத்துக்களை உருவாக்குவதே, இத்திட்டத்தின் பிரதான நோக்கம். இந்ததிட்டத்தால் குறிப்பாக, நடவு, களையெடுத்தல் உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு பெண்கள் வருவதில்லை. அவ்வாறு வந்தாலும் இரட்டிப்பு கூலி கேட்பதாக, விவசாய சங்கங்கள் குற்றஞ் சாட்டி வருகின்றன கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், எங்குமே குளம், குட்டை போன்றவை புதிதாக வெட்டப்படவில்லை. ஏற்கனவே உள்ள குளங்களை துார்வாரும் பணி கூட பெயரளவில் தான் நடக்கின்றன. ஒரு கிணறு கூட உருவாக்கப்படவில்லை.இதற்காக நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களும், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக உள்ளனர்.

அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, வெளி மாவட்டங்களில் இருக்கும் நபர்கள் பெயரில் அட்டை வழங்கி, அப்பணத்தை பெற்று வருகின்றனர்.

மேலும், வேலை செய்யாமல் பணம் பெறும் மக்களிடம், குறிப்பிட்ட தொகையை அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.தமிழக அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளுக்கும் கமிஷன் வழங்கப்படுகிறது. 100 நாட்கள் வேலை திட்டத்தில் நடந்த மோசடியில்  விருதுநகரில் மட்டும் 34.02 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.இது போல் தமிழகம் முழுவதும் என்ன பல மோசடிகள் நடந்து வருவதாக  ஆதரங்கள் சிக்கியுள்ளது. 

மேலும், 100 நாட்கள் வேலை நடந்தால், ஒவ்வொரு பஞ்சாயத்து தலைவருக்கும், 10,000 ரூபாய் வரை கமிஷனாக மக்கள் நலப் பணியாளர்கள் வழங்குகின்றனர். இது குறித்த புகார்கள், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மத்திய அரசுக்கு சென்றுள்ளன.

அதனால், இத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர். மேலும் இந்த திட்டத்தில் எத்தனை  ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்பது குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் ரகசியகமாகி விசாரித்து வருகிறார்களாம். மேலும் திர்ஹல் நெருங்கும் நேரத்தில்  அடிமட்டம் வரை கைது நடவடிக்கைகள் பாயும் எனடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது