24 special

பாஜகவின் "மாஸ்டர்" பிளான் வெளியானது !

Annamalai, senthil balaji
Annamalai, senthil balaji

கொங்கு மண்டலத்தை இந்த முறை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என திமுக தலைமை நினைக்கிறது அதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை கொங்கு மண்டல பொறுப்பாளராகவும் அக்கட்சி தலைமை அறிவித்து இருந்தது, இந்த சூழலில் கொங்கு மண்டலத்தை கைப்பற்ற பாஜக மாஸ்டர் பிளான் போட்டு இருப்பது தெரியவந்துள்ளது.


இது குறித்து அரசியல் ஆய்வாளர் சுந்தர் ராஜ சோழன் குறிப்பிட்டது பின்வருமாறு : திமுகவுக்கு நிகராக பாஜகவை சொல்லாதீர்கள் என மிக ஆவேசமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஊடகத்திடம் பேசியுள்ளார். அவருடைய வெறுப்பு நியாயமானது என்பதை விட காரணப்பூர்வமானது எனலாம்.

கொங்கு மண்டலத்தில் பாஜக அந்த நிலத்தின் நிலவியலோடும், உளவியலோடு அரசியல் செய்கிறது. ஆனால் திமுக இன்னும் அதற்கு அந்நியமாகவே நிற்கிறது. கோவையில் வெகுநாட்களுக்கு பிறகு பலமான கம்மா நாயுடுவை களமிறக்கியுள்ளது பாஜக.

கோவையினை கைப்பற்றுவதை தங்கள் வாழ்நாள் பெருமையாக நினைக்கும் திமுகவிற்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. காரணம்,தெலுங்கு சமூகங்களின் வாக்குகளுக்கு வலுத்த செல்வாக்குள்ள மண்டலம் கொங்கு. அதிலும் கோவையில் மிகுந்த பணபலமிக்க,தொழில் வளமிக்க கம்மா நாயுடுக்கள் நிச்சயமாக ஒரு அரசியல் சக்தி ஆவார்கள்.

இவர்களுடைய வாக்குகளை அனாமத்தாக அதிமுக, திமுக தங்களுக்கு சாதமாக சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருப்பி வந்தார்கள். அதுவும் செல்வி.ஜெயலலிதா - திரு.கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுகவை நோக்கி இவர்களை மொத்தமாக எடுக்கலாம் என பணி செய்கிறது திமுக.

இந்த நேரத்தில் கோவையில் பாலாஜி உத்தமராமசாமியை களமிறக்கியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை, பாலாஜி உத்தமராமசாமி Vs செந்தில் பாலாஜி என்று வந்தால் அது கோவை மட்டுமல்ல, கொங்கின் நிலவியலேயே பாஜக தனக்கு சாதகமாக திருப்பிக்கொள்ளும் என்பதை செந்தில் பாலாஜி அறிந்து வைத்துள்ளார்..

காரணம், பிரதமர் மோடி + அண்ணாமலை + அமைச்சர் முருகன் + பாலாஜி உத்தமராமசாமி என்கிற வரிசை, இந்துத்துவ குடையின் கீழ் சாதிய அதிகாரப்பகிர்வை ஏற்படுத்துகிறது பாஜக.

பாஜகவை பொறுத்தவரை மின்சார கட்டண உயர்வை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி போராட்டம் செய்தது, தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் உடலுறுப்பு அறுவடை செய்ய வலுகட்டாயமாக அடைத்து வைத்திருந்த 200 பேரை விடுவிக்க போராட்டம் நடத்தியது.

1 லட்சம் தேசியக் கொடி விநியோகம் செய்தது ஆயிரக்கணக்கான மக்களைக் கொண்டு நடத்திய வந்தேமாதர பேரணி, அவிநாசி சாலையில் பாஜகவை போஸ்ட்டர் ஒட்டாமல் தடுத்தது திமுக,

திமுக மட்டுமே போஸ்ட்டர் ஒட்டும் என நடத்திய அராஜகத்தை வேரரறுக்கும் விதமாக,அந்த போஸ்ட்டர்களை கிழித்தது என திமுகவுக்கு பலமான போட்டியை கொங்கு மண்டல களத்தில் உண்டு செய்துள்ளது பாஜக. இப்படி பாலாஜி உத்தமராமசாமி என்ற கம்மா நாயுடு தலைமையில் பாஜக தரும் நெருக்கடியை அமைச்சர் செந்தில் பாலாஜியால் தாக்குபிடிக்க முடியவில்லை.

கரூர்,கோவை,ஈரோடு,திருப்பூர் என 4 மேயர்களை வெள்ளாள கவுண்டருக்கு கொடுத்து பிறசமூக வெறுப்பை திமுகவுக்கு பெற்றுக் கொடுத்துவிட்டார். அதிமுகவுக்கு எதிராக திமுகவுக்கு வாக்களித்த பல சமூகங்கள் இன்று பாஜக பின்னால் அணிவகுக்க தயாராகிவிட்டது.

கம்மாநாயுடு, கம்பளத்தார், ஒக்கலிகவுடா, வேட்டுவ கவுண்டர், செங்குந்தர், 24 மனை செட்டியார், கொங்கு நாடார், படுகர் என பலசமூகங்களை அண்ணாமலை அரவணைத்துச் செல்வது கண் முன்னால் தெரிகிறது.

அதிமுக பலம் குறையும் அல்லது ஜாதி கட்சியாக சுருங்கும்,அந்த நிலையில் நாம் கவுண்டர் தளபதியை வைத்து பிறசமூக வாக்குகளை இலவசமாக பெறலாம் என நினைத்த திமுகவுக்கு பேரிடியை அண்ணாமலையின் நியமனம் கொங்கில் தருகிறது..

இதனால்தான் கார்த்திகேய சிவசேனாதிபதி போன்றவர்களை வைத்து கொங்கு வெள்ளாளரை OBC ஆக்கியது கருணாநிதி என பேச வைக்கிறார்கள். இது நிச்சயம் திமுகவுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும், தன் உழைப்பினால் முன்னேறிய கொங்கு வேளாளர் சமூகத்தை, தொழில் - விவசாயம் என்று தமிழகத்தின் அடையாளமிக்க அந்த சமூகத்தினை கோபாலபுர வாசலில் நிற்க வைப்பதை அந்த சமூகம் ஒருபோதும் விரும்பாது.

உள்ளாட்சி தேர்தலின் முடிவு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பிரதிபலிக்காது என்பது துல்லியமாக தெரிந்ததாலேயே எங்களுக்கும் பாஜகவுக்கும் போட்டியில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார்.

2024 ல் போட்டி பாஜகவிற்கும்,திமுகவிற்கும்தான் உறுதியாக நிலவியல் - உளவியல் ரீதியாக திமுக அங்கே வீழ்ச்சியை சந்திக்கும் என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜ சோழன்.

உத்திர பிரதேசத்தில் அரசியலில் வாய்ப்பு கிடைக்காத சிறுபான்மை இந்து சமூகங்களை ஒன்று சேர்த்து பாஜக வெற்றி பெற்றது போல் தமிழகத்திலும் வெற்றி பெற அதிரடி நடவடிக்கையை பாஜக தொடங்கி இருப்பது அக்கட்சியினர் வட்டத்தில் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.